×
 

அண்ணாமலையாருக்கு அரோகரா... திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றம்... முக்கிய அப்டேட்..!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கான கொடியேற்றம் நாளை நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் ஆன்மிக மையமாகத் திகழும் திருவண்ணாமலை, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஒரு அற்புதமான ஒளி விழாவை அணிவகுத்து நிற்கிறது. கார்த்திகை தீபம் என்று அழைக்கப்படும் இந்தத் திருவிழா, லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்னோடு இணைத்து, இருளைக் கடந்து ஒளியின் பெருமையைப் பாடுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபம் என்றாலே மெய்சிலிர்க்கும். தீபத் திருவிழாவின் போது மலை உச்சியில் தீபம் ஏற்றும்போது அண்ணாமலையாருக்கு அரோகரா., உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற கோஷங்கள் விண்ணை பிளக்கும்.

கார்த்திகை தீபத்தின் வரலாறு, புராணங்களின் ஆழமான கதைகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். தமிழ் பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாத பௌர்ணமியன்று, கிருத்திகா நட்சத்திரத்துடன் இணைந்து நிகழும் இந்த விழா, பத்து நாட்கள் நீடிக்கும் பிரஹ்மோத்சவமாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டு தீபத் திருவிழா கொண்டாட்டமாக டிசம்பர் 3 அன்று, மாலை 6:30 மணியளவில், திருவண்ணாமலையின் 2668 அடி உச்சியில் 30 அடி உயரமுள்ள பெரிய கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: அண்ணாமலையார் தீபத்திருவிழா… SAFETY FIRST… டிஜிபி விரிவான ஆய்வு…!

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் டிசம்பர் 3ம் தேதி நடக்க உள்ள திருக்கார்த்திகை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. 

தீபத் திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு காவல் தெய்வ வழிபாடு நிகழ்வு நடைபெற உள்ளது. அதன்படி சின்ன கடைவீதியில் உள்ள துர்க்கை அம்மனின் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவில் சம்மதியில் உள்ள பிடாரி அம்மனுக்கு படையிலிட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. இன்று விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளது. நாளை காலை 6:00 மணி முதல் 7.15 மணிக்குள் அண்ணாமலையார் கோவில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட உள்ளது. 

இதையும் படிங்க: திடீரென பள்ளிக்குள் புகுந்த ஆயுத கும்பல்..!! துப்பாக்கி முனையில் 303 மாணவர்கள் கடத்தல்..!! பெற்றோர் தவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share