×
 

மக்களே உஷார்!! அடிச்சி வெளுக்கப்போகுது... அலர்ட் மோடில் தமிழ்நாடு & புதுச்சேரி..!

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 2-ந் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. கோவை, தென்காசி, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளோடு, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி பல்வேறு பகுதிகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஆயிரம் கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அதிக நீர்வரத்தின் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலனை கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 2-ந் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது குஜராத்- வடக்கு கேரளா கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஜூலை 28 மற்றும் நாளை ஜூலை 29 ஆகிய நாட்களில் இடி- மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தரைக்காற்று, மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை வீசக் கூடும். அடுத்த 7 நாட்களுக்கு- ஆகஸ்ட் 2-ந் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: உஷாரா இருங்க மக்களே! கனமழை அப்டேட்.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். வரும் 31ம் தேதி வரை, தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மக்களே நோட் பண்ணிக்கோங்க... இந்த 7 மாவட்டங்களுக்கு வெளியானது எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share