×
 

ஜனநாயக திருவிழா...!! - தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது... ஆர்வத்துடன் குவிந்த மக்கள்...!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் 17-வது சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பினை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார். அதன்பிறகு அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல், பிரசாரம், வாக்கு சேகரிப்பு என மும்முரமாக அரசியல் பணிகளை செய்து வந்தனர். நேற்று முன் தினத்தோடு பிரசாரம் முடிந்தது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வந்தது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.  234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிட மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு 43 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வக்காளர்கள் உள்ளனர். 

இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை 6.30 மணியில் இருந்தே வரிசையில் காத்திருந்த மக்கள் வாக்களிக்க தொடங்கியுள்ளனர். கடும் வெயில் காரணமாக காலையிலேயே வாக்களிக்க அதிக அளவிலான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு என சிறப்பு ஏற்பாடுகளும், வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

துணை ராணுவ படையைச் சேர்ந்த 300 குழுவினரும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக அவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு போலீசாருடன் இணைந்து துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி வெப் காஸ்டிங் மூலம் நேரலையில் கண்காணிக்க தேர்தல் ஆணயம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக ஒரு லட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் வாக்குச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ளன வாக்குச்சாவடிகளில் வாக்கு பதிவு சுமூகமாக நடைபெறுகிறதா என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பொது பார்வையாளர்கள் சுழற்சி முறையில் ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தல்..! எல்லாரும் ஓட்டுப் போடுங்க..! நாளை நகைக்கடைகள் இயங்காது என அறிவிப்பு..!

மேலும் வாக்காளர்களுக்கு இடையூறு ஏதும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் வாக்குச்சாவடிகளுக்கு 100 மீட்டர் தொலைவிற்குள் அரசியல் கட்சியினர் கூடுவதற்கு அனுமதி இல்லை. வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபடவும் அனுமதி இல்லை. மேலும் வாக்குச்சாவடிக்குள் நுழைவு அட்டை பெற்றுள்ள வேட்பாளர்களின் முகவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் வாக்காளர்களுக்கு இடையூறு ஏதும் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது
 

இதையும் படிங்க: "NO CONFUSION"..! ஈஸியா ஓட்டு போடலாம்..! வாக்குச்சாவடி மையத்தில் கலர் கோடுகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share