×
 

தவெகவின் முதல் அமைச்சரவை கூட்டம்! முதல்வர் விஜய் அரசின் முழுமுதல் பட்ஜெட்! எகிறும் எதிர்பார்ப்பு!

த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை: தமிழகத்தில் 17-வது சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் என்பதால், கவர்னர் அர்லேக்கர் உரையாற்றுவார். இந்த உரையில் புதிய அரசின் முக்கிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் இடம் பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கவர்னர் உரைக்கு அடுத்த 3 நாட்கள் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.

இதன் பின்னர் 2026-2027 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தி.மு.க. அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டுக்கு பதிலாக வரும் முதல் முழு பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: ஓடோடி வெற்றி சான்றிதழை கொண்டு வந்த உதவியாளர்!! எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார் அமைச்சர் கீர்த்தனா!

த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த முக்கிய வாக்குறுதிகளான மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500-ஆக உயர்த்துதல், ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர், பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் உள்ளிட்ட திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறுமா என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு 4 நாட்கள் விவாதம் நடைபெறும். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பதில் உரை வழங்குவார். அதன் பின்னர் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதங்கள் தொடங்கும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 துறைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். அமைச்சர்கள் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள்.

சட்டசபை கூட்டம் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசின் முதல் பட்ஜெட் மற்றும் சட்டசபை கூட்டம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. த.வெ.க. அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை எந்த அளவுக்கு நிறைவேற்றும் என்பதை இந்தக் கூட்டம் தீர்மானிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: கடவுள் அறிய உறுதி!! உளமாற உறுதி! ரூட்டை மாற்றிய விஜய்! தமிழக சட்டசபை தேர்தலில் சுவாராஸ்ய பதவியேற்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share