×
 
☰

இன்று முதல் அமல்... 13 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி மாற்றம்.. ஆட்டோக்களுக்கு இனி இதுதான் ரேட்...!

13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் புதிய ஆட்டோ கட்டணம் இன்று முதல் அமலாகிறது

தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கான புதிய கட்டண முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான புதிய கட்டண விகிதங்களை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆட்டோக்களில் முதல் 1.8 கிலோமீட்டர் தூரத்திற்கான குறைந்தபட்சக் கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் பயணிக்கும் ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும். மலைப்பாதைகளில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு அடிப்படைக் கட்டணமாக ரூ.60 நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.30 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சாதாரணக் கட்டணத்தைவிட 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல், காத்திருப்புக் கட்டணமாக ஒரு நிமிடத்திற்கு ரூ.1 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்டோ கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றம், நீண்டகாலமாகக் கட்டண உயர்வைக் கோரி வந்த ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: #Breaking ருத்ரதாண்டவம் ஆடும் அர்னாப் புயல்... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...!

இதற்கிடையே, தமிழக அரசின் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம்சாட்டி வந்தனர். பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயண வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், ஆட்டோக்களைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என்றும், இதனால் தங்களது வருமானம் பாதிக்கப்படுவதாகவும் ஓட்டுநர்கள் கவலை தெரிவித்தனர்.

ஏற்கெனவே பெட்ரோல், எரிவாயு விலை, வாகனப் பராமரிப்புச் செலவு, உதிரிபாகங்களின் விலை மற்றும் காப்பீட்டுக் கட்டணம் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தால் வருமானம் மேலும் பாதிக்கப்படுவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு கட்டங்களில் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும், செயலிகள் வாயிலாக இயக்கப்படும் வாகனச் சேவைகளை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

இந்தச் சூழலில், நீண்டகாலக் கோரிக்கைகளைத் தொடர்ந்து தமிழக அரசு புதிய ஆட்டோ கட்டணத்தை அறிவித்துள்ளது. புதிய கட்டண உயர்வு ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானத்தை ஓரளவுக்குப் பாதுகாக்குமா, அதே நேரத்தில் பொதுமக்களுக்குக் கூடுதல் பயணச் செலவை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதிய கட்டண முறை அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி ஆட்டோக்கள் இயக்கப்படுவதையும், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுப்பதையும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

இதையும் படிங்க: திக்..திக்...! - இன்னும் 3 மணி நேரம் தான்... அரக்கத்தனத்தை காட்ட ஆரம்பித்த ‘அர்னாப்’...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share