விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் Game Changer திட்டங்கள்... கர்ப்பிணிகளுக்கு குட் நியூஸ்..! ஸ்மார்ட் மூவ்..!!
தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டசபையில் அறிவித்து உள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் மீதான உரையை நிதி அமைச்சர் மரிய வில்சன் நிகழ்த்தினார். தாய் கேர் திட்டத்திற்காக ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கருவுற்ற பெண்களுக்கான 'சேவை மற்றும் உதவி மையங்கள்’ மாநிலம் முழுவதும் அமைக்கப்படும். மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் தங்கியிருந்து பயன் பெறலாம்.
கட்டணமில்லாமல் உணவு மற்றும் மருத்துவ உதவிகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்காக 9300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறைக்கு 13 ஆயிரத்து 561 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 21,524 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களுக்கு 7675 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 29,863 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நம்ம சாலை திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்திற்காக 2117 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை மாற்றும் மெகா பட்ஜெட்... AI City முதல் Solar Subsidy வரை..! மாஸ் அறிவிப்புகள்..!
நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு 8,252 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரவை மாடு வழங்கும் திட்டம் தொடர்பாக 54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மூன்று புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதிய ஏசி மின்சார பேருந்துகள் மற்றும் பேருந்து பணிமனைகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களுக்கு 7,657 கோடியும் செயல்திறன் இடைவெளி நிதி உதவிக்கு 2650 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!