×
 

பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தடுக்கப் பெற்றோர்கள் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும் எனத் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் பள்ளித் தேர்வு முடிவுகள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.


தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளிவரும் நாட்களில், குழந்தைகள் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும் என்று ஆணையம் எச்சரிக்கிறது. இந்த முக்கியமான நாட்களில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும்.

முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றால், சில குழந்தைகள் தவறான முடிவுகளை எடுக்கும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்; அவர்களை அத்தகைய சூழலில் இருந்து பாதுகாப்பது பெற்றோரின் கடமையாகும்.

இதையும் படிங்க: "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைப் பயன்படுத்தி, தேர்தலுக்காக அவர்களை மனரீதியாகத் தூண்டிப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது போன்ற தூண்டுதல்களால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யப் பெற்றோர்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. குழந்தைகளின் செயல்பாடுகளில் ஏதேனும் மாற்றம் தெரிந்தாலோ அல்லது அவர்கள் மனதளவில் சோர்வாகக் காணப்பட்டாலோ உடனடியாகப் பேச்சு கொடுத்து அவர்களைத் தேற்ற வேண்டும். குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து என்றாலோ அல்லது மனரீதியான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் தேவைப்பட்டாலோ, குழந்தை பாதுகாப்பு இலவச எண்ணான 1098-ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

 

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share