×
 

டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஓய்வுக்குப் பிறகு இந்த துறையின் தலைவராகிறாரா? - டிக் அடித்த முதல்வர்..!

ஓய்வு பெறவிருக்கும் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

தமிழகத்தின் டிஜிபியாக இருந்து வருபவர் சங்கர் ஜிவால். இவரது பதவிக்காலம் இந்த மாத இறுதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், அடுத்த புதிய டிஜிபி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதற்கான ஆவணங்களில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கையெழுத்திட்டு உள்ளார். மேலும், டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அரசுத் துறையில் ஆலோசகராகவோ அல்லது அரசுத் துறையின் ஆணையராகவோ பொறுப்பு வழங்கப்படலாம் என்று பேசப்பட்டு வந்தது.

தமிழக டிஜிபியாக இருக்கக்கூடிய சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ம் தேதியுடன்  ஓய்வு பெறுகிறார். தற்போது அவர் ஓய்வு பெறுவதற்கான கோப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டிருப்பதாகக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாது அவருக்கு புதிதாக அமைய இருக்கக்கூடிய அந்த தீயணைப்பு ஆணையத்தின் தலைவர் பதவி அவருக்கு வழங்க வழங்கப்படும் என்றும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த ஆணையத்தின் தலைவராக சங்கர் ஜிவால்  இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் எனக்கூறப்படுகிறது.

 சங்கர் ஜிவால் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம், டிஜிபியாக பொறுப்பேற்றார். தற்போது வரை டிஜிபி பதவி வகித்து வரும் அவர், 29ஆம் தேதி ஓய்வு பெற இருப்பதால் அடுத்த டிஜிபி நியமிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  குறிப்பாக  டிஜிபி சீமா அகர்வால், ராஜீவ் குமார் மற்றும் சந்தீப் ராய்த்தூர் ஆகிய மூன்று மூத்த காவல்துறை அதிகாரிகளின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மொத்தம் எட்டு மூத்த காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் முதற்கட்டமாக பரிந்துரைக்கப்பட்டு, அதில் சீனியாரிட்டி அடிப்படையில் டிஜிபி சீமா அகர்வால், ராஜீவ் குமார் மற்றும் சந்தீப்ராய் ராய்த்தூர் ஆகிய மூன்று பேரின் பெயரில் இறுதிக்கட்ட பரிந்துரையில் இடம் பிடித்துள்ளது. 
 

இதையும் படிங்க: பாஜக-காரங்க அறிவு செயல்பாடு அபாரமாகிட்டு வருது! சு.வெங்கடேசன் விமர்சனம்...

இதையும் படிங்க: கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் கேப்டன்..! அண்ணாமலை புகழாரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share