முதல்வர் வருகைக்காக பனைமரம் வெட்டப்பட்டதா? முற்றுப்புள்ளி வைத்த TN FACT CHECK...!
முதல்வர் வருகைக்காக பனை மரங்கள் வெட்டப்பட்டதாக பரவிய தகவலுக்கு தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் உரிய விளக்கம் அளித்துள்ளது.
முதலமைச்சரின் வருகைக்காக பனை மரங்கள் வெட்டப்பட்டதாகவும், திமுக நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பரவும் தகவல் தவறானது என கூறப்பட்டுள்ளது. ஆய்க்குடிக்கு அருகே அனந்தபுரம் பகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், அதற்காக அந்த இடத்திலிருந்து ஏராளமான பனை மரங்களை சட்டத்துக்கு புறம்பாக வெட்டி சாய்த்து இருப்பதாகவும் தகவல்கள் பரவின.
திமுக நிர்வாகிகள் இந்த செயலில் ஈடுபட்டு இருப்பதாகவும் அந்த பகுதியில் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பு இருப்பதாகவும் பொதுக்கூட்டம் ரத்தாகும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. திமுக அரசால் கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனை மரங்களை வெட்டிய திமுக நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தகவல்கள் பரவின.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் நிகழ்ச்சிகளுக்காக மரங்கள் சட்டத்திற்குப் புறம்பாக வெட்டப்பட்டதாக தகவல்கள் பரப்பப்படுவதாகவும் ஆனால் இது தவறான தகவல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தனி நபர்கள் தங்களின் பட்டா நிலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 4 பனை மரங்களை உரிய அனுமதி பெற்று வெட்டியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசுக்கு கெட்ட பெயர் வரக்கூடாதுன்னு நெனச்சேன்..! நீர் திறப்பு விவகாரம் குறித்து செல்வப் பெருந்தகை விளக்கம்...!
அதற்கு இணையாக அரசாணை எண்.238-ன் படி 1:10 என்ற விகிதத்தில் 40 பனை மரக் கன்றுகளை நட்டு வளர்த்திடவும் மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சரின் வருகைக்காக பனை மரங்கள் வெட்டப்பட்டதாக கூறுவது தவறான தகவல் என்றும் தமிழ்நாடு அரசின் தகவல் சரி பார்ப்பதும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விவசாயி விரோத திமுகவின் உண்மை முகம் இதுதான்..! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நயினார் நேரில் ஆறுதல்...!