×
 

கோவிலை இடித்து கோரிப்பாளையம் தர்கா கட்டப்பட்டதா? உண்மை நிலவரத்தை சொன்ன TN FACT CHECK..!

கோயிலை இடித்து மதுரை கோரிப்பாளையம் தர்கா கட்டப்பட்டதாகப் பரவும் தகவல் வதந்தி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமூக வலைதளங்கள் பல தேவையான தகவல்களை அறிய உதவியாக இருந்து வருகிறது. இருப்பினும் சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் அவ்வப்போது பரப்படுகிறது. உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்து வருகிறது. கோயிலை இடித்து தர்கா கட்டப்பட்டு இருப்பதாக வெளியான தகவலின் உண்மை நிலவரத்தை கூறியுள்ளது.

கோயிலை இடித்து மதுரை கோரிப்பாளையம் தர்கா கட்டப்பட்டதாகப் பரவும் தகவல் வதந்தி என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தர்கா, கோயிலை இடித்துக் கட்டப்பட்டது என்று சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் பகிரப்பட்டு வருகிறது என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

இது வெறுப்பை பரப்பும் வதந்தி என்று தெரிவித்துள்ளது. மதுரையின் கோரிப்பாளையம் தர்கா 14 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் கட்டிடக் கலையின் அடிப்படையில் கட்டப்பட்டது என்று தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை வெளியிட்ட Islamic Architecture in Tamilnadu என்ற ஆய்வு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளது. தர்காவின் தூண்கள் திராவிட கட்டிடக் கலையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதாகவும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: எல்லோர் மனசுலையும் தாமரை மலரனும்... என்னயா நடக்குது? கோவில் குருக்கள் பேச்சுக்கு கண்டனம்...!

தமிழ்நாட்டில் இதே போன்று ஏராளமான இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் கோயில்களைப் போன்று திராவிட கட்டிடக் கலையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளதாக ஆதாரங்களுடன் அந்த நூல் விளக்குகிறது என்றும் கூறியுள்ளது. எனவே, மதவெறுப்பை பரப்பாதீர் என்றும் வதந்திகளை நம்பாதீர் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில் மாணவியை கொன்றது பட்டியலின இளைஞனா? உடைந்த உண்மைகள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share