×
 

அவங்க பாவம்யா! நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள்... செல்வப் பெருந்தகை கடும் கண்டனம்

கடற்கொள்ளையர்களால் நாகை மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு செல்வப் பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்தார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. மீனவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கடற்கொள்ளையர்களால் மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.

நாகப்பட்டினம் மாவட்டம் செருதூரைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மீனவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் அவர்களின் வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மீனவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டித்துள்ளார்.

ஒருபக்கம் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் நிகழ்வு நடந்து கொண்டு இருக்க, மற்றொரு பக்கம் இலங்கை கடற்கொள்ளையர்களும் மீனவர்களை தாக்கி அவர்களின் பொருட்களை திருடிச் செல்லும் அதிர்ச்சிகர சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவித்தார். கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது என்றும் வாழ்வாதாரத்திற்காக உயிரை பணயம் வைத்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது எனவும் கூறினார்.

இதையும் படிங்க: பரவால்ல! இப்பயாச்சு அவருக்கு புரிஞ்சுது... டிடிவி தினகரன் முடிவு பற்றி செல்வப் பெருந்தகை கருத்து

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்களை தாக்குவதோடு அவர்களிடம் இருந்து கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வப் பெருந்தகை வலியுறு செல்வார்பெருந்தகை வலியுறுத்தினார். இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்தி மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக தூதரக ரீதியில் நடவடிக்கை எடுத்து மீனவர்கள் பிரச்சனையை முடிவுக் கொண்டு வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: #GST 2.0: சிறு சலுகை மக்கள் வேதனையை அடக்காது..! செல்வப்பெருந்தகை கருத்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share