×
 

சிறப்பு செயலாக்க திட்டங்களுக்கு ரூ.17 கோடி...! பேரவையில் அடுத்தடுத்து வெளியான தரமான அறிவிப்புகள்..!

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சிறப்பு செயலாக்கத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழக சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். இது வழக்கமான முழு பட்ஜெட் இல்லை, ஏனென்றால் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதைய அரசு குறுகிய கால செலவுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசு சிறப்பு திட்ட செயலாக்க துறையை மிகுந்த முக்கியத்துவத்துடன் கருதி வருகிறது. இத்துறை முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள், மக்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும், மேற்பார்வை செய்வதற்கும் முக்கிய பங்காற்றுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்கள் மகளிர் உரிமைத் தொகை, மாணவர் காலை உணவு திட்டம், இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவை இத்துறையின் மூலமே ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைவதற்கும், அரசின் நோக்கங்கள் நிறைவேறுவதற்கும் இத்துறை மிக முக்கிய அடித்தளமாக செயல்படுகிறது.

இதையும் படிங்க: விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு..! இடைக்கால பட்ஜெட்டில் சிறப்பு கவனம்..!!

இந்தப் பின்னணியில்தான், 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு 17,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு அளிக்கும் உறுதியான அர்ப்பணிப்பை தெளிவாகக் காட்டுகிறது. இடைக்கால பட்ஜெட் என்பது தேர்தல் ஆண்டில் வருவதால், ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றுவதற்கும், அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்த ஒதுக்கீடு பெரிதும் உதவும்.

இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு...! சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share