×
 

சாத்தான்குளம் விபத்து எதிரொலி! ஆட்சியர்கள் இதை செய்ய தவறினால் அவ்வளவுதான்... தமிழக அரசு அதிரடி!

பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் சாலையோரத்தில் இருந்த கிணற்றில் ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சாத்தான்குளம் அருகே உள்ள சிந்தாமணிக்கும் மீரான்குளத்துக்கும் இடையே 8 பேருடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் வலதுபுறம் உள்ள தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் பாய்ந்தது. இதனைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share