கரூர் கோரச் சம்பவம்... தமிழக அரசு பதில் அளிக்க ஆணை... அதிரடி காட்டிய நீதிமன்றம்...!
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழக அரசியலில் புதிய அலை என்று கூறப்படும் விஜயின் அரசியல் பயணம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் நடைபெற்ற மாநாடுகள் அதனை பிரதிபலித்தன. தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த வி6ஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை.
இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 110 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. கரூர் துயரச்சம்பவம் நிகழ்ந்ததும் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் இரண்டு லட்ச ரூபாய் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 20 லட்ச ரூபாய் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார். இதனிடையே இழப்பீட்டு தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஹாப்பி நியூஸ்... மாற்று திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு... அரசாணை வெளியீடு...!
இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வலியுறுத்திய மனுக்கள் மீது தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க நீதிபதி ஆணை பிறப்பித்தார்.
இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் "மொபைல் முத்தம்மா"... இனிமே EASY தான்... மக்கள் மத்தியில் வரவேற்பு...!