மாநில கல்விக் கொள்கை துணிச்சலான முடிவு... திட்டங்களை பட்டியலிட்ட தமிழக அரசு
மாநிலக் கல்விக் கொள்கை துணிச்சலான முன்னெடுப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறந்த தரமான பள்ளிக்கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தை நோக்கிய ஒரு துணிச்சலான முன்னெடுப்பாக தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் ஒவ்வொரு இயலும், மறு கட்டமைப்பும், புதுப்பித்தலுக்கான வழிமுறையையும் கவனத்துடன் முன் வைக்கிறது என தெரிவித்துள்ளது. 317 கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், 660 கோடியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
658 கோடி நிதியுடன் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி திட்டமும், 45 கோடியில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 352 கோடியில் 44 மாதிரி பள்ளிகள், 100.82 கோடியில் 28 தகை சால் பள்ளிகள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடேங்கப்பா..!! 30 நாளில் இத்தனை லட்சம் மனுக்களா..!! வெற்றிநடைபோடும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்..!
79 ஆயிரத்து 723 இடைநிலை ஆசிரியர்களுக்கு 81 கோடியில் டேப் வழங்கப்படுவதாகவும் மேல்நிலை கணினி, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பள்ளி ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை திட்டம் உருவாக்கபட்டு உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் ஆசிரியர்களை ஊக்குப்படுத்தும் வெளிநாட்டு கல்வி சுற்றுலா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 3043 முதுகலை ஆசிரியர்கள் 13 வட்டார கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: சுற்றுலாத்துறையின் வருமானம் இத்தனை மடங்கு அதிகரிப்பா..!! மார்தட்டி சொல்லும் தமிழக அரசு..!