×
 

20 கேமராக்கள், 115+ ஆடியோ ரிஸிவர்கள்... இளையராஜா பாராட்டு விழாவில் தமிழ்நாடு அரசு செய்த தரமான சம்பவம்...! 

தொழில்நுட்ப ரீதியில் மிரள வைக்கும் ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் நம்மை பிரம்மிக்க வைக்கிறது. 

தமிழ்நாடு அரசின் சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழா மீது முடிந்த அளவுக்கு விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. அரசு இந்த விழாவை ஏற்பாடு செய்த விதம் பற்றி பரவலாக ஏற்பாடுகள் சரியில்லை என்று போகிற போக்கில் அடித்துவிடுகிறார்கள்.  ஆனால் தொழில்நுட்ப ரீதியில் மிரள வைக்கும் ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் நம்மை பிரம்மிக்க வைக்கிறது. 

இளையராஜாவுக்கான பாராட்டு விழா வெறும் கொண்டாட்டமாக மட்டுமின்றி, திராவிட மாடல் அரசின் பண்பாட்டுப் பெருமிதத்திற்கும்  கலைத் தொழில்நுட்ப உச்சத்துக்கும் சான்றாக அமைந்ததாக கூறுகின்றனர் விழாவை நேரில் பார்த்தவர்கள். அதற்கு சிம்பொனி இசையைப் பதிவுசெய்யப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் என்னென்ன என்று தெரிந்துகொண்டாலே வியந்துபோவோம். சிம்பொனி மட்டுமின்றி மொத்த நிகழ்ச்சியை 4Kவீடியோ தரத்தில் சுமார் 20 கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறன.  ஒவ்வொரு இசைக் கலைஞரின் நுட்பமான அசைவும் துல்லியமாகப் படம்பிடிக்கப் பட்டதோடு, இந்தியாவின் தலைசிறந்த எடிட்டரான வெங்கடேஸ்வரன் சுவாமிநாதன்  தலைமையில் ஆன்லைன் எடிட்டிங் செய்யப்பட்டது

மிக முக்கியமாக, லண்டன் சிம்பொனி இசைக் குழுவைச் சேர்ந்த நிபுணர், முழு இசைக் கோர்வையையும் கவனித்து, அடுத்து எந்த  இசைக் கருவி பயன்படுத்தப்பட இருக்கிறது என்பதை முன்கூட்டியே கேமரா குழுவுக்கு அறிவித்தபடி இருந்தார். வயலின் இசை வரும்போது வயலின் கலைஞர்களுக்கு கேமராக்கள் சென்றுவிடும்

இதையும் படிங்க: என்ன பேச்சு இதெல்லாம்? டிடிவிக்கு வைத்தெரிச்சல்... வறுத்தெடுத்த காயத்ரி ரகுராம்

இதனால்  ஒவ்வொரு காட்சியும் சரியான நேரத்தில் படமாக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, இது ஒவ்வொரு இசைக்கருவியின் தனிப்பட்ட ஒலியையும் துல்லியமாகப் பதிவு செய்ய 115+ ஆடியோ ரிஸிவர்கள் (மைக்ஸ்) பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 

நிகழ்ச்சியை Live Audio-வில் கேட்பவர்களுக்கு  ஒரு மிக்ஸ் அவுட் உருவாக்கப்பட்டதோடு, ஒவ்வொரு இசைக்கருவியின் இசையையும் தனித்தனி ஆடியோ டிராக்குகளாகவும் கணினியில் சேமிக்கப்பட்டிருக்கின்றன. போஸ்ட் புரொடக்‌ஷன் நடைபெறும்போது அவை பயன்படுத்தப்படும். அதாவது மொத்த சிம்பொனியும் பிரமாண்டமான கலைப்படைப்பாக உருவாக்கப்படும். 

இசைஞானி இளையராஜா குறிப்பிட்டதுபோல, இந்த முழுமையான நிகழ்ச்சியின் காணொளி, இன்னும் சில நகரங்களில் நேரடி சிம்பொனி நிகழ்ச்சிகள் நடைபெற்ற பிறகு, ஓடிடி தளங்களில் வெளியாகக்கூடும்.  மொத்தத்தில் இளையராஜாவுக்கான பாராட்டு விழா மிகத் துல்லியமான திட்டமிடலுடன் நவீனத் தொழில்நுட்பங்களின் துணையோடு நிகழ்த்தப்பட்ட ஒன்று எனக்கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: ஊட்டி எஸ்டேட், தனியார் தோட்டங்களில் இதற்கு தடை... மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் - வனத்துறை அதிரடி உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share