எந்தெந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன? 717 கடைகளின் பட்டியல் வெளியீடு..!!
குறிப்பாக கோவை மாவட்டத்தில் மட்டும் 71 கடைகள் மூடப்பட்டுள்ளன.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பதவியேற்ற பிறகு, கோவில்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு அருகில் இயங்கி வந்த 717 டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதாக அறிவித்தது. இந்த நடவடிக்கை பல தரப்பினராலும் வரவேற்கப்பட்டது. ஆனால், மூடப்பட்ட கடைகளின் முழுமையான பட்டியல் உடனடியாக வெளியிடப்படாததால், பொதுமக்களிடையே சில கேள்விகள் எழுந்தன.
நேற்று தமிழக சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் பேசும்போது, 717 கடைகள் மூடப்பட்டது தொடர்பான முழு விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என உறுதியளித்திருந்தார். அதன்படி, அரசாணை எண் 129 அடிப்படையில் மூடப்பட்ட அனைத்து கடைகளின் முகவரிகள், மாவட்டம், பகுதி, கடை எண் ஆகியவற்றுடன் கூடிய விரிவான பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலை கியூஆர் கோடு வழியாக ஸ்கேன் செய்து எளிதாக பார்க்க முடியும். ஒவ்வொரு கடையும் வரிசை எண்ணுடன் குறிப்பிடப்பட்டுள்ளதால், முழுமையான தகவல்களை பொதுமக்கள் அணுக முடியும். குறிப்பாக கோவை மாவட்டத்தில் மட்டும் 71 கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சொன்னபடியே செஞ்சாச்சு! 717 மதுக்கடைகள் மூடல் – முகவரியுடன் முழு லிஸ்ட் வெளியீடு!
இவற்றில் வடக்குப் பகுதியில் 48 கடைகளும், தெற்குப் பகுதியில் 23 கடைகளும் அடங்கும். வடக்கில் வீரபாண்டி பிரஸ்காலனி, ஆனைக்கட்டி ரோட்டில் மாங்கரை, கணுவாய் அருகே நஞ்சுண்டாபுரம், அன்னூர் கே.சி.கே. தோட்டம், காந்திபுரம் ஜி.பி. சிக்னல் அருகில் உள்ள கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மேலும் காளப்பட்டி ஷார்ப் நகர், சிந்தாமணிபுதூர், ஆவாரம்பாளையம், அரசமரம் வீதி, காந்திபுரம் நேரு வீதி, ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோடு போன்ற இடங்களிலும் கடைகள் மூடப்பட்டன.
கோவை மாநகரில் அவினாசி ரோட்டில் பீளமேடு, ஹோபா கல்லூரி அருகில், சுங்கனூர் கண்ணுசாமி கவுண்டர் வீதியில் இரண்டு கடைகள், சவுரிபாளையம் சந்திரகாந்தி நகர், காளப்பட்டி நேரு வீதி, லஜபதிராய் ரோடு, ராம் நகர் காளிங்கராயர் வீதி, ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு, கவுண்டம்பாளையம் தனியார் மருத்துவமனை அருகில் ஆகிய இடங்களில் இயங்கிய கடைகளும் மூடப்பட்டுள்ளன.
வெங்கிட்டாபுரம், என்.எஸ்.ஆர். ரோடு, நியூ சிந்தாமணிபுதூர் கிருஷ்ணராயபுரம், சின்னவேடம்பட்டி அத்திபாளையம் ரோடு, உடையாம்பாளையம், ராம்நகர், அவினாசி ரோடு சித்ரா உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கரட்டுமேடு, குருடம்பாளையம், வெள்ளக்கிணறு திருவள்ளுவர் வீதி, சுங்கனூர், லாலி ரோடு, அலமேலு மங்கம்மா நகர், வி.சி.வி. ரோடு, கீரணத்தம் ரோடு, தெலுங்குபாளையம், கலைவாணி பிரஸ் வீதி, சலிவன் வீதி, தேவ பள்ளி, கோல்டுவின்ஸ், மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகில், ஊட்டி ரோடு, மார்க்கெட் ரோடு விரிவாக்கம், உழவர் சந்தை ரோடு, காரமடை, திம்மம்பாளையம், கணபதி போன்ற இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கடைகள் மூடப்பட்டன.
தெற்குப் பகுதியில் டவுன்ஹால், சூலூர் பட்டணம், புலியகுளம்-ராமநாதபுரம் ரோடு, சிங்காநல்லூர் காமராஜர் ரோடு, வால்பாறை நகரம், போதம்பாட்டி, சிங்காநல்லூர், ராமநாதபுரம்-நஞ்சுண்டாபுரம் ரோடு, ஒலிம்பஸ், பூ மார்க்கெட், சாரதா மில் ரோடு அரசன் தியேட்டர், போத்தனூர்-சாரதா மில் ரோடு, வைசியாள் வீதி, புலியகுளம், கந்தசாமி போலீஸ் வீதி, சின்னியம்பாளையம் ஆகிய இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன. சுந்தராபுரம் சிட்கோ காலனி, பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு, கோட்டூர் ரோடு, உக்கடம் ராஜா தியேட்டர், பொள்ளாச்சி நகராட்சி அலுவலக ரோடு, ஏ.டி.சி. தியேட்டர் உள்ளிட்ட இடங்களிலும் இதேபோல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, மது விற்பனையால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளைக் குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. முழுப் பட்டியலை கியூஆர் கோடு மூலம் அணுகி, உள்ளூர் மக்கள் தங்கள் பகுதிகளில் மூடப்பட்ட கடைகளை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: #BREAKING செந்தில் பாலாஜிக்கு கிடுக்குப்பிடி... டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சகோதரருக்கு லுக்அவுட் நோட்டீஸ்...!