×
 

இன்று தாக்கலாகிறது இடைக்கால பட்ஜெட்... கலைஞர், அண்ணா நினைவிடங்களில் அமைச்சர்கள் மரியாதை...!

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தலைவர்கள் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இன்று  பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதால் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் மெரினாவில் உள்ள கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். 

தமிழக சட்​டப்​பேர​வை​யின் இந்த ஆண்டு முதல் கூட்​டம் கடந்த ஜனவரி 20ம் தேதி தொடங்​கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதம் ஜனவரி 22ம் தேதி தொடங்​கியது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஜனவரி 24ம் தேதி பதில் அளித்​தார். இதையடுத்​து, மறு​தேதி குறிப்​பி​டா​மல் பேரவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. 

தமிழகத்​தில் சில மாதங்​களில் சட்​டமன்ற தேர்​தல் நடை​பெறவுள்​ள​தால், இடைக்​கால பட்​ஜெட்டை மட்​டும் தாக்​கல்செய்ய முடி​யும். பின்​னர்​, ஆட்​சிஅமைக்​கும்​ கட்​சி பட்​ஜெட்​டை​தாக்​கல்​ செய்​யும். அதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலக சட்டமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அடுத்த கூட்டத்தொடர் கூடுகிறது. இன்று 2026-27ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். 20-ம் தேதி 2026-27-ம் ஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26-ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானிய கோரிக்​கை​யும் தாக்கல் செய்​யப்​படவுள்ளன.

இதையும் படிங்க: திக்...திக்... வீடியோ...!! மயான கொள்ளை திருவிழாவில் விபரீதம்... பக்தர்கள் மீது சாய்ந்த 60 அடி தேர்...!

பிப்​ரவரி 20ம் தேதி வரை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடை​பெற வாய்ப்​புள்​ள​தாக கூறப்​படு​கிறது. சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரவுள்​ள​தால், இந்த இடைக்​கால பட்​ஜெட்​டில் வழக்​க​மான நிதி ஒதுக்​கீடு​கள் மட்​டுமின்​றி, மக்​களைக் கவரும் பல முக்​கிய அறி​விப்​பு​களும் இடம்​பெறு​வதற்கு வாய்ப்​புள்​ளது. அதேபோல் இன்று வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.  

இதனை முன்னிட்டு, இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர்கள் நினைவிடங்களில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தலைவர்கள் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

வழக்கம் போல் இந்த முறையும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கலாகிறது. பட்ஜெட் குறித்த தகவல்களை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தங்களுக்கு முன்னால் உள்ள டேப் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

இதையும் படிங்க: "எமன் ஏறும் எருமை மாடு... ஒருத்தரையாவது குளோஸ் பண்ணிடுது...” - விஜயை விளாசிய மதுக்கூர் ராமலிங்கம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share