×
 

49 வயது தாய்க்கு அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS சீட்.. கனவை நனவாக்கிய விடாமுயற்சி..!

49 வயது தாய்க்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 6,600 எம்பிபிஎஸ் இடங்களும், 1,583 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. இதில் 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 495 எம்பிபிஎஸ் மற்றும் 119 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் 1,144 எம்பிபிஎஸ் மற்றும் 515 பிடிஎஸ் இடங்கள், மற்றும் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் 592 எம்பிபிஎஸ் மற்றும் 15 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

கலந்தாய்வு ஆன்லைன் மற்றும் நேரடி முறைகளில் நடைபெறுகிறது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் 7.5% உள் இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு சென்னை அண்ணா சாலையிலுள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேரடி கலந்தாய்வும் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இந்தியா வந்தாச்சு.!! மோடி, முர்முவோட பேச்சுவார்த்தை... என்ன எதிர்பார்க்கலாம்?

இந்த ஆண்டு 72,743 மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனர், மேலும் தகுதியானவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூலை 25 அன்று வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 6 முதல் 11 வரை இட ஒதுக்கீடு ஆணையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம், மேலும் ஆகஸ்ட் 11 மாலை 5 மணிக்குள் மாணவர்கள் ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும். இதுதவிர, 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கி, ஆகஸ்ட் 2 வரை சாய்ஸ் ஃபில்லிங் செய்யலாம். 

(TN MBBS counselling 2025) இளநிலை மருத்துவப்படிப்பு படிக்க வயது வரம்பு இல்லை என்கிற நிலை இந்தியாவில் இருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு முதல் வயதுவரம்பு இல்லாமல் யார் வேண்டுமானாலும் நீட் தேர்வு எழுதலாம் என்கிற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன் காரணமாக பல ஆண்டுக்கு பின் வயதானவர்கள் இப்போது நீட் தேர்வுகளை எழுதுகிறார்கள்.  

இந்நிலையில் தென்காசியைச் சேர்ந்த 49 வயது பிசியோதெரபிஸ்ட் அமுதவல்லி மணிவண்ணன், தனது மருத்துவர் கனவை நிறைவேற்றி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். நீட் தேர்வில் வெற்றி பெற்று, மாற்றுத் திறனாளிகளுக்கான (PwD) ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ சேர்க்கை கலந்தாய்வின் முதல் நாளில் இவர் இடம் பெற்றார். 

இவரது மகள் சம்யுக்தாவின் நீட் தேர்வு பயிற்சியால் ஊக்கமடைந்த அமுதவல்லி, 30 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய தனது மருத்துவக் கனவை மீண்டும் துரத்தினார். நீட் தேர்வுக்கு வயது வரம்பு இல்லாததால், அமுதவல்லி தனது மகளுடன் இணைந்து தயாராகி, கடினமான தேர்வில் வெற்றி பெற்றார். இவரது மகள் சம்யுக்தா, பொது பிரிவில் சேர்க்கைக்காக காத்திருக்கிறார். 

தமிழ்நாட்டில் 7.5% இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்புகள் இவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. இந்த சாதனை, வயது ஒரு தடையல்ல என்பதை உணர்த்துகிறது. அமுதவல்லியின் விடாமுயற்சி, பலருக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. தனது கனவை நோக்கி முன்னேறிய இவரது பயணம், கல்வி மற்றும் மருத்துவத் துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இவரது சாதனை, கடின உழைப்பும் உறுதியும் இருந்தால் எந்த வயதிலும் இலக்குகளை அடைய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இதுகுறித்து பேசிய அமுதவல்லி, "நான் 'பிசியோதெரபிஸ்ட்டாக' பணியாற்றி வருகிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மருத்துவம் படிக்க ஆசை வந்தது. ஆனால் அப்போது எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது என்னுடைய மகள் மூலம் அந்த கனவு நிறைவேறி உள்ளது. ஆனால் ஒரே மருத்துவக்கல்லூரியில் இருவரும் படிக்கக்கூடாது என உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

 

இதையும் படிங்க: மாஸ்டர் பிளான் போடும் ஓ.பி.எஸ்.. பார்க்கில் முதல்வருடன் சந்திப்பு.. என்ன காரணம்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share