×
 

“1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கு இன்று தேர்வு” – தமிழகம் முழுவதும் 1.78 லட்சம் பேர் பங்கேற்பு!!

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களை நிரப்புவதற்கான முதற்கட்ட எழுத்துத் தேர்வு இன்று மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) நடத்தும் இந்தத் தேர்வை எழுத, சுமார் 1 லட்சத்து 78 ஆயிரம் இளைஞர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துத் தேர்வு மையங்களுக்குப் படை எடுத்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி இதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணிக்குத் தேர்வு தொடங்கியது. இதில் 933 தாலுகா உதவி ஆய்வாளர் பணியிடங்களும், 366 ஆயுதப்படை உதவி ஆய்வாளர் பணியிடங்களும் அடங்கும். சென்னையில் மட்டும் ராணி மேரி கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 9 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தம் 46 தேர்வு மையங்களில் தேர்வர்கள் அமர்ந்து விடைகளைக் குறித்துவருகின்றனர். காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை முதன்மைத் தேர்வும், அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3:30 மணி முதல் மாலை 5:10 மணி வரை கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வும் நடைபெறவுள்ளன.

தேர்வு மையங்களுக்குள் முறைகேடுகளைத் தவிர்க்கக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 8 மணிக்கே மையங்களுக்கு வரத் தொடங்கினர். கைப்பேசி, நுண் கணக்கீடு கருவிகள் (Calculator), நவீனக் கைக்கடிகாரங்கள் (Smart Watch) உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையில் சேரத் துடிக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுத் தேர்வாக இது அமைந்துள்ளதால், அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்.. பஞ்சத்தால் வாடிய 1,000 பேர் படுகொலை... துடிதுடிக்க தூக்கிலிட்டு கொன்ற துணை ராணுவம்...!

இதையும் படிங்க: எலான் மஸ்க் நிறுவனத்திற்கு ரூ. 1,260 கோடி அபராதம்!! என்ன தப்பு பண்ணாரு தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share