சென்னையில் கோடை குடிநீர் விநியோகம்..தெலுங்கு-கங்கை திட்டத்தை கையில் எடுத்த நீர்வளத்துறை..!
கோடையில் சென்னையின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏப்ரல் மாதத்திற்குள் கிருஷ்ணா நதி நீர் வழங்குமாறு ஆந்திராவிடம் கோரிக்கை விடுக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த பரவலான மலையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து நீர் தேக்கங்களிலும் போதுமான அளவிற்கு நீர் சேகரிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. மேலும் இதனால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்றும் தெரிவித்திருந்தது.
அதன்படி ஐந்து நீர் தேக்கங்களிலும் 79.4% தண்ணீர் ஆனது தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகரித்து வருவதனால், நீர் வெப்பமயமாதலால் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் அளவுகளில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் கோடை காலத்தில் சென்னை மக்களின் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக தமிழக நீர்வளத்துறை ஆந்திராவின் உதவியை நாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக சென்னைக்கு தண்ணீர் பற்றாக்குறையின் போது, ஆந்திர மாநிலம் கண்டல் ஏறு அணையில் இருந்து தெலுங்கு கங்கை திட்ட கால்வாய் மூலம் நதிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: உ.பியில் 8 ஆண்டுகளில் 210 கோடி மரங்கள்.. யோகி ஆதித்யநாத் அதிரடி..!
கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீர் ஆனது தமிழக எல்லை பகுதியான திருவள்ளூர் மாவட்டம் வழியாக சென்னையை வந்தடைகிறது. இதன் மூலம் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தத்தின்படி, ஆந்திரா தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் மற்றும் ஜனவரி முதல் ஏப்ரல் என இரண்டு காலகட்ட அடிப்படையில் நீர் திறந்த விடப்படுவது வழக்கம். கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நதிநீர் ஆனது, சென்னையில் உள்ள பூண்டி நீர் தேக்கத்தில் சேகரிக்கப்படும்.
அதன்படி ஜனவரி முதல் ஏப்ரல் மாத காலகட்டம் வரை சென்னைக்கு 4000 மிக கன அடி தண்ணீர் திறக்கப்படும். அதன்படி தற்போது பூண்டி நீர் தேக்கத்தில் 86 சதவீதமாக உள்ள தண்ணீர் ஆனது, பகல் நேரங்களில் அதிகரிக்கும் வெப்பநிலையால் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
அந்த நேரத்தில் கிருஷ்ணா நதி நீர் வரும் பட்சத்தில் சென்னைக்கு குடிநீர் வினியோகம் என்பது தட்டுப்பாடு இன்றி செயல்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வாறு கண்ட வேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும் பட்சத்தில் அதாவது ஆந்திர மாநிலத்திற்கும் குடிநீர் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
தொடர்ந்து சென்னை மாநகரில் தற்போது நாளொன்றுக்கு 106 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் இதில் 100 கோடி லிட்டர் தண்ணீரானது வீட்டு இணைப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதிய விமான நிலையம்... எதிர்பார்க்காத அறிவிப்பு தந்த பட்ஜெட்!!