மக்களே உஷார்... தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்.. 3 நாட்களுக்கு பேய் மழை இருக்காம்...!
தமிழ்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது.
மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டின் காரணமாக மத்திய மியான்மர் கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து, 26-ஆம் தேதி வாக்கில், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறப்பட்டது.
இது தெற்கு ஒரிசா -வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற 27-ஆம் தேதி கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மகாளய அமாவாசை... முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்!
7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் செப் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிலேயே நான் தான் இளிச்சவாயன்! நொந்துபோன அண்ணாமலை