வீடு தேடி வரும் வாக்காளர் தகவல் சீட்டு! ஏப்ரல் 10 முதல் விநியோகம்...தேர்தல் ஆணையம் அதிரடி!
வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி 10ம் தேதி முதல் தொடங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி மற்றும் வரிசை எண் ஆகிய விபரங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், 'வாக்காளர் தகவல் சீட்டு' (Voter Information Slip) விநியோகிக்கும் பணியை வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தொடங்க இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers - BLO) நேரடியாக வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று இந்தத் தகவல் சீட்டுகளை விநியோகம் செய்வார்கள். வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 17-ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்பு வழங்கப்பட்ட புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு மாற்றாக, தற்போது இந்தத் தகவல் சீட்டு அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. இதில் பின்வரும் முக்கிய விபரங்கள் இடம்பெற்றிருக்கும்:
இதையும் படிங்க: வாக்குப்பதிவு தினத்தன்று ஊழியர்களுக்கு சம்பளத்துடன் லீவு..!! அதிரடி காட்டிய எலக்ஷன் கமிஷன்..!!
வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்.
வாக்குச்சாவடியின் பெயர் மற்றும் அதன் முகவரி.
வாக்குப் பதிவு நாள் மற்றும் நேரம்.
வாக்காளர் தகவல் சீட்டு என்பது வாக்காளர்களுக்குத் தகவல் அளிப்பதற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக (Identity Proof) இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்காளர்கள் தங்களது வாக்கைச் செலுத்த வாக்காளர் அடையாள அட்டை (EPIC) அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பிற 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
வாக்குப் பதிவு நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே அனைத்து வாக்காளர்களுக்கும் இந்தச் சீட்டுகள் கிடைப்பதை மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம், வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் தங்களது வரிசை எண்ணைத் தேடி அலைவதைத் தவிர்க்க முடியும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழக புதிய டிஜிபியாக சந்தீ ராய் ரத்தோர் நியமனம்!