×
 

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! மாணவர்களுக்கு உயர்கல்வித் துறை முக்கிய அறிவிப்பு!

மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாகத் தங்களின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.

`தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் நாளை முதல் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்களுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்தச் சேர்க்கை செயல்முறையில் பங்கேற்கின்றன. சுமார் 159 வகையான பல்வேறு பாடப்பிரிவுகளில் (Courses) மாணவர்கள் சேர வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 1,26,959 இடங்களுக்குச் சேர்க்கை நடைபெறவுள்ளது.

மாணவர்கள் நாளை முதல் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் வீட்டிலிருந்தோ அல்லது இணைய சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு உதவும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centres) அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: பத்ம விருதுகள் 2027: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள் - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!''

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் புதிய அரசு அமைவது குறித்த பரபரப்புகளுக்கு மத்தியில், மாணவர்களின் உயர்கல்விக்கான இந்தச் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளில் சேர இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: ஒரே ஒரு ஓட்டு... வரலாறு மாறியது! திருப்பத்தூர் தேர்தல் முடிவை வியந்து பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share