×
 

வரும் 12ம் தேதி குரூப் 4 தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு..!

தமிழகத்தில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 போட்டி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுதோறும் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப் 4, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகள் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

முன்னதாக டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் பயன்படுத்தப்படும் ஓஎம்ஆர் (OMR - Optical Mark Recognition) விடைத்தாளில் கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்ட நிலையில், மீண்டும் கடந்த மாதம் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டது. இந்த மாற்றங்கள் வரவிருக்கும் தேர்வுகளுக்கு பொருந்தும், மேலும் விண்ணப்பதாரர்கள் புதிய வடிவமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி எழுதுபவர்களின் கவனத்திற்கு.. OMR தாள்களில் புதிய மாற்றம்..!

கடந்த காலங்களில் தேர்வு எழுதி முடிந்ததும் எத்தனை வினாக்களுக்கு விடை அளித்துள்ளோம், எந்தெந்த கேட்டகிரி (A, B, C, D)-யில் விடைகள் அளிக்கப்பட்டது என்பது பூர்த்தி செய்ய வேண்டி இருக்கும். தற்போதுள்ள OMR தாளில் கேட்டகிரி வாயிலாக பதில்களின் விவரங்களை பூர்த்தி செய்ய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பிரிவில் 3935 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை பெறப்பட்டன. இதில் லட்சக்கணக்கானோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்டமாக எழுத்து தேர்வு ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30க்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

கிராம நிர்வாக அலுவலர் - 215 காலியிடங்கள், ஜூனியர் உதவியாளர் - 1,621 காலியிடங்கள், ஜூனியர் உதவியாளர் - 11 காலியிடங்கள், ஜூனியர் உதவியாளர் - 46 காலியிடங்கள், ஜூனியர் வருவாய் ஆய்வாளர் - 239 காலியிடங்கள், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (அலுவலகம்) – 1 காலியிடம், ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் டைப்பிஸ்ட் - 2 காலியிடங்கள், தட்டச்சர் - 1,100 காலியிடங்கள், ஸ்டெனோ டைப்பிஸ்ட் (கிரேடு - III) – 368 காலியிடங்கள், தனிப்பட்ட எழுத்தர் - 2 காலியிடங்கள், உதவியாளர் - 54 காலியிடங்கள், கள உதவியாளர் - 19 காலியிடங்கள், வனக் காவலர் - 62 காலியிடங்கள், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காவலர் - 35 காலியிடங்கள், வனக் கண்காணிப்பாளர் - 71 காலியிடங்கள், வனக் கண்காணிப்பாளர் (பழங்குடி இளைஞர்) - 24 காலியிடங்கள், வனக் காவலர் - 15 காலியிடங்கள் (கூடுதல் பட்டியல்), வனக் கண்காணிப்பாளர் - 50 காலியிடங்கள் (கூடுதல் பட்டியல்) என மொத்தம் 3,935 காலி பணியிடங்களுக்கு அலுவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள்.

இந்நிலையில் குரூப் 4 போட்டி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது. இந்த ஹால் டிக்கெட்டை பின்வரும் வழியில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். முதலில் TNPSC அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpsc.gov.in க்குச் செல்ல வேண்டும்.

Home Page முகப்புப் பக்கத்தில் "ஆன்லைன் சேவைகள்" Online service அல்லது "ஹால் டிக்கெட் பதிவிறக்கம்" HallTicket Download இணைப்புகளை தேட வேண்டும்.

"TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் 2025" அல்லது "ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கு - IV (குரூப்-IV சேவைகள்)" இணைப்பைக் கண்டுபிடித்து அதில் கிளிக் செய்ய வேண்டும்.

உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி (அல்லது பிற தேவையான பதிவுத் தகவல்) அதில் உங்களிடம் கேட்கப்படும்.அடுத்ததாக உங்கள் ஹால் பாஸை திரையில் காண, "சமர்ப்பி" Submit பொத்தானைக் கிளிக் செய்யவும்.

தேர்வு நாளிலும் எதிர்கால பயன்பாட்டிற்காகவும், நுழைவுச் சீட்டை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்து, உங்களிடம் இரண்டு தெளிவான அச்சுப்பிரதிகள் இருப்பதை உறுதி செய்யவும்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி எழுதுபவர்களின் கவனத்திற்கு.. OMR தாள்களில் புதிய மாற்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share