×
 

மீன் பிடி தடை காலம் எதிரொலி... கிடுகிடுவென உயரும் முட்டை விலை - நாளை எவ்வளவு?

முட்டை ஒன்றின்  பண்ணைக் கொள்முதல் விலை   ரூ.5 ஆக நிர்ணயம். இன்று ஒரே நாளில் 10 காசுகள் உயர்வு

தமிழகத்தில் மீன் பிடி தடை காலம்  காரணமாக தொடர்ந்து அதிகரித்து வரும் முட்டை விலையால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். கோடை வெயில் காரணமாக முட்டை உற்பத்தியும் கணிசமாக குறைந்துள்ளதால்,    முட்டை ஒன்றின்  பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.90 ல் இருந்து 10 காசுகள் உயர்த்தி ரூ.5 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று (5-5-2025) அறிவித்துள்ளது.இந்த விலை நாளை (6-5-2025) காலை முதல் அமலுக்கு வருகிறது. கடந்த 10 நாட்களில் முட்டை விலை ரூ.1.05 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முட்டை யின் நுகர்வு மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது .பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் அமலில் உள்ளது. கோடை வெயில் காலம் காரணமாக முட்டை உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. இதுவே விலை உயர்வு க்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

   தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தினசரி 20 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. தமிழக  அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோழி முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி.. திடீரென குவிந்த 50 பேர்.. நாமக்கல் - சேலம் சாலையில் பரபரப்பு..!

 

 

இதையும் படிங்க: நாடு முழுவதும் போர் பதற்றம்! போர்கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share