×
 

ஒரே நாளில் ஆறு விமானங்கள்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. பயணிகள் கவலை..!

சென்னையில் இன்று ஒரே நாளில் ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளை அவதியில் ஆழ்த்தியுள்ளது. 

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 4:50 மணிக்கு சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் , காலை 7:40 மணிக்கு சென்னையிலிருந்து அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 1 மணிக்கு சென்னையிலிருந்து மும்பை செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் என சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படக்கூடிய 3 விமானங்கள் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. 

அதேபோல் சென்னை விமான நிலையத்திற்கு மும்பையிலிருந்து காலை 7 மணிக்கு சென்னை வர வேண்டிய ஆகாஷ் ஏர்லைன்ஸ் பயணி விமானம், பகல் 12:30 மணிக்கு அந்தமானிலிருந்து சென்னை வரவேண்டிய ஆகாஷ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பிற்பகல் 2:50 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து சென்னை வர வேண்டிய ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆகிய மூணு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

போதிய பயணிகள் இல்லாத காரணத்தினால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனாலும் இந்த விமானங்களில் பயணிக்க இருந்த ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு வேறு விமானங்களில் பயணிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சில பயணிகளுக்கு வேறு மாற்று தேதிகளில் பயணிப்பதற்கு வசதியாக டிக்கெட்கள் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: போன வேகத்தில் திரும்பிய இண்டிகோ விமானம்.. அவசர அவசரமாக தரையிறக்கம்.. கதிகலங்கிய பயணிகள்..!

இதையும் படிங்க: அமிர்தசரஸ் கோவில் சுக்குநூறாகிடும் ! மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share