×
 

காலை வாரிவிட்ட மழை..!! குறைந்தது வரத்து..! கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை..!!

மழை மற்றும் வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மொத்த காய்கறி சந்தையான கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.20 அதிகரித்து ரூ.40க்கு விற்பனையாகிறது. மழை பொய்த்து போனதாலும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து கணிசமாகக் குறைந்ததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோயம்பேடு சந்தையில் தினசரி சராசரியாக 50 முதல் 60 டன் தக்காளி வரத்து இருக்கும். ஆனால் நேற்று முன்தினம் வரை இந்த அளவு 40 டன்னாகக் குறைந்தது. இன்று மேலும் குறைந்து 30 டன்னுக்கு மேல் வரத்து இல்லை என்று சந்தை வியாபாரிகள் கூறுகின்றனர். கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி பெருமளவு வருகிறது. ஆனால் அங்கு தொடர்ந்து மழை பொய்த்து வருவதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விநியோகம் குறைந்து விலை உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: கொஞ்ச நேரத்துல வெடிக்க போகுது! தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றம்...!

கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையானது. ஆனால் இப்போது ரூ.40 ஆகிவிட்டது. வரத்து இப்படியே குறைந்தால் அடுத்த வாரம் ரூ.50ஐ தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில்லறை வியாபாரிகள் இந்த விலை உயர்வை உடனடியாக பிரதிபலிக்கின்றனர். சென்னை நகர்ப்புறங்களில் உள்ள கடைகளில் தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. இது வீட்டு பொருளாதாரத்தை பாதிக்கும் என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தக்காளி இல்லாமல் சமையலே நடக்காது. விலை இப்படி உயர்ந்தால் என்ன செய்வது? என்று இல்லத்தரசிகள் கேள்வி எழுப்புகின்றனர். விவசாயிகள் சங்கத்தினர், அரசு உடனடியாக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை எளிதாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க விதை, உர விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.பி சந்தை அதிகாரிகள், வரத்து அதிகரித்தால் விலை சீராகும் என்று உறுதியளிக்கின்றனர். ஆனால் அடுத்த சில தினங்களுக்கு விலை உயர்வு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மக்கள் தக்காளி வாங்குவதில் தயக்கம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: தங்கம், வெள்ளி பொருட்கள் மாயம்!! சபரிமலையை தொடர்ந்து சர்ச்சையில் குருவாயூர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share