×
 

ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஊழல் தடுப்புத்துறை தலைவரா?... டி.ஆர். பாலு ஆவேசம்...!

புகாரே இல்லாமல் தலைமை செயலாளர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக டி.ஆர் பாலு  கண்டனம் தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி, தலைமை செயலாளரை மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில் இது தொடர்பாக திமுகவினுடைய பொருளாளர் டி.ஆர். பாலு  தனது கண்டத்தை தெரிவித்து தேர்தல் ஆணயத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் எந்தவித புகார்களும் இல்லாத நிலையில் தலைமை செயலாளரை மாற்றியும், பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான சந்தீப் மிட்டலை ஊழல் தடுப்புப் பிரிவு தலைமை இயக்குனராக நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு அரசினுடைய தலைமை செயலராக எம். சாய்க்குமார் ஐஏஎஸ், 

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையுடைய தலைமை இயக்குனராக சந்தீப் மிட்டல் ஐபிஎஸையும் நியமித்து தலைமை தேர்தல் ஆணயம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் சுட்டி காட்டி இருக்கிறார். மேலும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் இந்திய தேர்தல் ஆணயத்தால் அறிவிக்கப்பட்ட விதிமுறைகள் நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ள நிலையில் 08.04.2026ம் தேதி உத்தரவின் பெயரில்  தமிழ்நாட்டினுடைய தலைமை செயலாளரும்,  பொறுப்பு டிஜிபியும் மாற்றப்பட்டிருப்பது ஏன்? என  கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற பணிமாறுதல்களுக்கு திராவிட முன்னேற்ற கழகம் தனது கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்வதாகவும், ஆணையத்தினுடைய உத்தரவு இதற்கான எந்த காரணங்களும் குறிப்பிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் முருகானந்தம் குறித்து எந்த ஒரு முக்கிய அரசியல் கட்சியும் எந்தவித புகாரும் அளிக்கவில்லை, அப்படியிருக்கையில் அவர் அந்த பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்படுவதற்கான எந்த ஒரு தகுதியான அல்லது நியாயமான காரணங்களும் இல்லை எனவும் டி.ஆர்.பாலு சுட்டிக்காட்டி இருக்கிறார். 

இதையும் படிங்க: தேர்தல் 2026: அதிக வாக்குகள் சேகரிக்கும் முகவர்களுக்கு 1 பவுன் தங்கம்! செந்தில் பாலாஜி அதிரடி!

தமிழ்நாட்டில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியுள்ள, அதனால் அரசாங்கத்தினுடைய செயல்பாடுகள் முடங்கி விடக்கூடாது அடுத்த அரசு அமைந்து புதிய அமைச்சரவை பதியேற்கும் வரையில் நிர்வாகத்தில் ஒரு தொடர்ச்சி இருக்க வேண்டிய அவசியமாகும். குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் காலகட்டத்தில் அரசாங்கத்தினுடைய அன்றாட செயல்பாடுகளை கண்காணித்து நெறிப்படுத்துவர்தா ன் தலைமைச் செயலாளர் ஆவார் என தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதற்கு முந்தைய மாதத்தில் நிர்வாகம் சார்ந்த பல்வேறு வழக்கமான கோப்புகள், நீதிமன்ற வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகள் கையாள வேண்டிய உள்ள சூழலில் முருகானந்தத்தை மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.

இரண்டாவதாக ஊழல் தடுப்புத்துறையின் அண்மை கால செயல்பாடுகளை பார்க்கையில் கலங்கமற்ற நேர்மை நடுநிலைமை மற்றும் எவ்வித குறைபாடுகளுமற்ற பணிப்பதிவு ஆகியவற்றை கொண்ட ஒரு அதிகாரியை மட்டுமே  தலைவரையாக நியமித்திருக்க வேண்டும். ஆனால் சந்தீப் பிட்டல் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து பாஜக தலைமையிலானது தேர்தல் காளத்தில் பிரதான எதிர்கட்சியாக போட்டிடும் அதிமுகவை உள்ளடக்கியதுமான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாகவே அவர் செயல்படுவார் என்பதில் எங்கள் மனதிலும் தமிழ்நாட்டு மக்கள் மனதிலும் எவ்வித ஐயமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் சந்தீப் மிட்டல் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதால் அவரை மாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

இதையும் படிங்க: தண்ணீர் தேங்காத வடிவமைப்பு...! எங்கள் சாதனை..!! விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share