அடடே! ஹெல்மெட் போட்டா ஒரு கிலோ ஆப்பிள்... நூதன முறையில் டிராபிக் போலீஸ் விழிப்புணர்வு...!
தஞ்சையில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போக்குவரத்து விதிமுறைகள் சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், வாகன ஓட்டிகளின் ஒழுங்கை பராமரிக்கவும் உருவாக்கப்பட்டவை. இந்தியாவில் மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் அதன் 2019 திருத்தங்கள் இந்த விதிமுறைகளை வரையறுக்கின்றன. இந்தச் சட்டத்தின் கீழ், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சிவப்பு விளக்கு மீறல், தடை செய்யப்பட்ட பகுதியில் நிறுத்துதல், ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.
2019-ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அபராதத் தொகைகளை கணிசமாக உயர்த்தியது. இந்த உயர்வு மக்கள் மத்தியில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியது, ஆனால் விபத்துகளை குறைப்பதற்கு இது அவசியமாக கருதப்பட்டது.
ஹெல்மெட் அணிவதன் அவசியம் தொடர்பாக பல்வேறு விதங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து காவலர்களும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். பெட்ரோல் பங்குகள் கூட ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு முன்னெடுப்புகளை நடத்துகின்றனர். ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்றும் கூட அறிவித்து உள்ளதை நாம் பார்த்து இருப்போம்.
இதையும் படிங்க: விவசாயி விரோத திமுகவின் உண்மை முகம் இதுதான்..! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நயினார் நேரில் ஆறுதல்...!
அந்த வகையில் தஞ்சாவூரில் போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தஞ்சாவூரில் போக்குவரத்து ஆய்வாளராக பணிபுரியும் ரவிச்சந்திரன் தலைமையிலான டிராபிக் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஒரு கிலோ ஆப்பிள் வழங்கி பாராட்டினர். ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும், ஹெல்மெட் அணிவதை ஊக்கப்படுத்தும் நிகழ்வாகவும் இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 76 வயதிலும் இப்படி ஒரு சுறுசுறுப்பா? ஜி20 மாநாடு முடிந்ததும் மோடி அடுத்த மூவ்! தலைவர்கள் பாராட்டு!