×
 

சென்னை வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு... தப்பி தவறிக்கூட அந்த பக்கம் போயிடாதீங்க...!

மெட்ரோ ரயில் பாதை பணிக்காக அடையாறு எல்.பி. சாலையில், பங்க் சிக்னல் சந்திப்பிலிருந்து மகாத்மா காந்தி சாலை சந்திப்பு வரை இன்று முதல் சாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பாதை பணிக்காக அடையாறு எல்.பி. சாலையில், பங்க் சிக்னல் சந்திப்பிலிருந்து மகாத்மா காந்தி சாலை சந்திப்பு வரை இன்று முதல் சாலை முழுவதுமாக மூடப்பட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதையொட்டி பல்வேறு போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருவான்மியூரிலிருந்து திருவி.க. பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களும் எல்.பி. சாலை – மகாத்மா காந்தி சாலை சந்திப்பை அடைந்து, அங்கிருந்து மகாத்மா காந்தி சாலை, சாஸ்திரி நகர் முதல் பிரதான சாலை, சாஸ்திரி நகர் முதல் அவென்யூ வழியாக மீண்டும் எல்.பி. சாலையை அடையுமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சாஸ்திரி நகர் ஏழாவது அவென்யூ வழியாகச் செல்லும் வாகனங்கள் மகாத்மா காந்தி சாலையை அடைந்து, அங்கிருந்து வலதுபுறம் திரும்பி சாஸ்திரி நகர் முதல் பிரதான சாலையையும், பின்னர் இடதுபுறம் திரும்பி சாஸ்திரி நகர் முதல் அவென்யூ வழியாக எல்.பி. சாலையை அடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாடே பேரதிர்ச்சி...!! - அயோத்தி ராமர் கோயிலில் பகீர் சம்பவம்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய சி.எம். யோகி...!

எல்.பி. சாலையிலிருந்து திருவான்மியூர் நோக்கி வரும் வாகனங்கள் சாஸ்திரி நகர் முதல் அவென்யூ வழியாகச் சென்று, வலதுபுறம் திரும்பி ஒன்பதாவது குறுக்குச் சாலை, பின்னர் இடதுபுறம் திரும்பி எட்டாவது குறுக்குச் சாலை, அதன்பின் பத்தாவது குறுக்குச் சாலை வழியாக மகாத்மா காந்தி சாலையை அடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது ஒருவழிப் பாதையாக செயல்பட்டு வரும் சாஸ்திரி நகர் முதல் பிரதான சாலை முதல் மகாத்மா காந்தி சாலை வரையிலான பகுதியும், எல்.பி. சாலை முதல் சாஸ்திரி நகர் முதல் அவென்யூ வரையிலான சாலையும் தற்காலிகமாக இருவழிப் பாதையாக மாற்றப்படுகின்றன.

அதேநேரத்தில், சாஸ்திரி நகர் முதல் பிரதான சாலையில் திருவி.க. பாலம் நோக்கிச் செல்லும் பாதையும், 11-வது குறுக்குச் சாலையில் திருவான்மியூர் நோக்கிச் செல்லும் பாதையும் ஒருவழிப் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவான்மியூரிலிருந்து திருவி.க. பாலம் நோக்கிச் செல்லும் இலகுரக வாகனங்கள் எல்.பி. சாலை – மகாத்மா காந்தி சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, இந்திரா நகர் இரண்டாவது அவென்யூவை அடைந்து, அங்கிருந்து வலதுபுறம் திரும்பி முதல் பிரதான சாலையை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பணிகளை முன்னிட்டு இந்த போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ஐடி கார்டு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share