×
 

பயங்கரத்தின் உச்சம்... மின்சாரம் பாய்ந்து கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி...!

விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கியதில் 7 மாத கர்ப்பிணி  உட்பட  3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் அருகே காரிசேரி கிராமத்தில் திருவிழாவிற்காக மைக் செட் அமைத்த போது உயர் அழுத்த மின்சார கம்பியில் வயர்பட்டதில் 7 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட  3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

விருதுநகர் அருகேயுள்ளது காரிசேரி கிராமம். அங்கு கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த மைக் செட் உரிமையாளர் திருப்பதி (25) என்பவர்  வயர்களை இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வயரானது,  உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதாக கூறப்படுகிறது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தை தொடர்ந்து மதுரையிலும் தென்னை மரங்களில் பூச்சிவெட்டு.. பேராசிரியர் எச்சரிக்கை!

இதனால்  அவர் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அருகில் இருந்த திருப்பதியின் பாட்டி பாக்கியம்(65),அவரது மனைவி  7 மாத கர்ப்பிணி லதா(25) மற்றும்  ஆகியோர் மீதும் இதையடுத்து, இருவர் மீதும் மின்சாரம் தாக்கியது. சிறிது நேரத்தில் மூவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 


இந்தநிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கவின், தர்மர் ஆகியோரும் மூவரையும் காப்பாற்றச் சென்றுள்ளனர். அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்தனர். உயிரிழந்த தம்பதிக்கு 2 1/2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இச்சம்பவம் குறித்து ஆமத்தூர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் திமுகவினர் அராஜகம்! எங்க இருந்து துணிச்சல் வருது? அண்ணாமலை விளாசல்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share