×
 

வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து! சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!

கேரளாவிலிருந்து வந்த வாகனம் கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து; மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்.

பொள்ளாச்சி - வால்பாறை மலைப்பாதையில் இன்று காலை நடைபெற்ற பயங்கர கார் விபத்தில், கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மலைப்பாதையில் இருந்து உருண்டு விழுந்ததில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியிலிருந்து வால்பாறையை நோக்கிச் சுற்றுலாப் பயணிகள் 16 பேர் ஒரு வேனில் இன்று காலை பயணம் மேற்கொண்டுள்ளனர். வால்பாறை மலைப்பாதையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவில் வேன் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியுள்ளது. நிலைதடுமாறிய வாகனம், அருகில் இருந்த 9-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பள்ளத்தில் தலைகுப்புற விழுந்து உருக்குலைந்தது.

இந்தக் கோர விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வாகனத்தில் இருந்த மற்ற பயணிகள் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், வால்பாறை மற்றும் பொள்ளாச்சி பகுதியிலிருந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களைப் பள்ளத்தில் இருந்து மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாகப் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை அரசு மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் கோர சம்பவம்: பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கார்..!! 6 பேர் பரிதாப பலி..!!

இந்த விபத்து காரணமாகப் பொள்ளாச்சி - வால்பாறை மலைப்பாதையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மலைப்பாதையில் அதிகாலையில் நிலவும் பனிமூட்டம் அல்லது வாகனத்தின் பிரேக் செயலிழந்தது விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா வந்த இடத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் கோழிக்கோடு மற்றும் பொள்ளாச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: சத்தீஸ்கர் அனல் மின் நிலையத்தில் கோர விபத்து! பாய்லர் வெடித்து 9 பேர் உடல்சிதறி உயிரிழப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share