×
 
☰

தாமதமான ரயில் சேவை... கும்மிடிப்பூண்டி - கவரப்பேட்டை இடையே பழுதான சிக்னல்..! பயணிகள் கடும் அவதி!!

ரயில் நிலையத்தில் சிக்னல் பிரச்சனையால் 1 மணி நேரம் தாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டன.

கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட சிக்னல் பழுது காரணமாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. 1 மணி நேரம் தாமதமாக ரயில்கள் இயக்கப்படுவதால் ரயில் பயணிகள் அவதி அடைந்தனர். முழுமையாக 4 வழிப் பாதையாக மாற்றி குறித்த நேரத்தில் ரயில்களை இயக்கிட வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் புறநகர் ரயிலில் பயணித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள், நோயாளிகள் என பல தரப்பட்ட மக்கள் பயணித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை நோக்கி செல்லும் புறநகர் ரயில்கள் கவரைப்பேட்டை, பொன்னேரி, அனுப்பம்பட்டு, மீஞ்சூர் என அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் சென்னையில் இருந்து ஆந்திரா வழியே வட மாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் தொடர்ந்து ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டு வருவதால் சிரமங்களை சந்தித்து வருவதாக ரயில் பயணிகள் புகார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: IRCTC வரலாற்றில் சாதனை... ஒரே நாளில் 20.06 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு..!

கும்மிடிப்பூண்டி செல்லும் மார்க்கத்தில் ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில்களும் காலதாமதம் ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படாததால் அலுவலகம் செல்வதில் கடும் சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவிக்கின்றனர். 

விரைவு ரயில்கள், சரக்கு ரயில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டும் ரயில் பயணிகள் விரைந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தை முழுமையாக 4 வழி பாதையாக மாற்றிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். 1மணி நேரத்திற்கு பிறகு பழுது சரி செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்கள் ஒரு மணி நேரம் காலதாமதமாக இயக்கப்பட்டு வருவதால் ரயில் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு ஊருக்கு செல்வோருக்கு சிக்கல்... 3வது நாளாக ரயில் டிக்கெட் புக்கிங்கில் தொடரும் அவலம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share