×
 

திருச்சியில் கரைந்த அதிமுக கூடாரம்... தவெகவுக்கு தாவிய முக்கிய புள்ளிகள்... பட்டியலை பார்த்தாலே தலை சுத்துதே...!!

விஜய் எதிர்த்து போட்டியிட்டவர், அமைச்சர் ஆகியோர் இன்று தவெகவில் இணைந்தனர்.

சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சியின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள் இணைந்து வந்தனர்.

இதனிடையே அதிமுகவில் இருந்து தேர்தலுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன்,  திருச்சி கு.பா கிருஷ்ணன், தமிழ்நாடு வெற்றி கழகத்தில் இணைந்தார். மேலும் அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் இணைய உள்ளதாக தெரிவித்தார் ஆனால் தேர்தல் முடியும் வரை அதிமுகவை சேர்ந்த யாரும் அக்கட்சியில் இணையவில்லை.

இந்நிலையில் தேர்தலுக்குப் பின்னர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோருக்கு ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையில் 
திருச்சியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அவரது மகன் ஜவஹர்லால் புஸ்ஸி ஆனந்த முன்னிலையில் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். இதேபோல் அதிமுகவை சேர்ந்த திருச்சி மேற்கு தொகுதியில் நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பத்மநாதன், மற்றும் கட்சியினர் மருத்துவர் சுப்பையா, பூபதி, முத்துக்குமார், மேலும் பல்வேறு பதவி வகித்து வந்த வந்த அதிமுகவினர் தொடர்ந்து கு.பா.கிருஷ்ணன் முன்னிலையில் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இதன் காரணமாக திருச்சி அதிமுகவில் மிகுந்த சலசலப்பு ஏற்பட்டது பலர் தொடர்ந்து கு.பா கிருஷ்ணன் தலைமையில் இணைந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர்கள்...! அரங்கத்தை அதிரவைத்த தொண்டர்கள்..!! உற்சாக வரவேற்பு..!

இதேபோல் எடப்பாடி பழனிச்சாமியின் அதிஅடி நடவடிக்கையால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்ற சட்ட மன்ற உறுப்பினர்கள்  பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமராவேல், தாராபுரம் சத்யபாமா,  இசக்கி சுப்பையா, விராலிமலை சி.விஜயபாஸ்கர் கரூர் எம் .ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதன் காரணமாக அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

 திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் துணை மேயர் சீனிவாசன், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் விஜய்க்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர்  ராஜசேகர் ஆகியோர் இன்று  மாமல்லபுரத்தில் நடைபெற்ற  தமிழக வெற்றி கழகம் இணைப்பு நிகழ்ச்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் வளர்மதி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் எம்ஜிஆர் ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுகவை தவறான வழிக்கு எடப்பாடி பழனிச்சாமி கொண்டு செல்வதால் மனவேதனையுடன் கட்சியில் இருந்து விலகுவதாக இரண்டு பக்க அளவிற்கு கடிதத்தை எழுதி உள்ளார்.

திருச்சியை பொறுத்தவரை முக்கிய பொறுப்பு வகித்து வந்த முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் வளர்மதி, மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்த முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவது திருச்சியில் அதிமுக கூடாரத்தை காலி செய்வதாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதால் இவர்களது ஆதரவாளர்களும் த வெகவில் இடையே உள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படியோ திருச்சி ஒரு காலத்தில் அதிமுகவின் கூடாரமாக இருந்த நிலையில் இன்று அந்த கூடாரம் சரிவை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் அதிமுகவை சேர்ந்த முக்கிய நபர்கள் விரைவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் தமிழகம் முழுவதும் இந்த நிலை ஏற்படும் என நம்மிடம் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி நடவடிக்கை எடுப்பாரா? கரையும் கட்சியை மீட்டு எடுப்பாரா என்பது எதிர்காலம் தான் பதில் சொல்லும்.

இதையும் படிங்க: "எல்லாமே FAKE"..! ஊத்தங்கரை MLA வின் புகார் பொய்...!! வரிந்து கட்டிய அப்பாவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share