×
 

அதிகாலையிலேயே பரபரப்பு... விமானத்திற்குள்ளேயே சிக்கித் தவித்த 180 பயணிகள் - தற்போதைய நிலை என்ன?

ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக,  விமானம் ஓடு பாதையிலேயே அவசரமாக நிறுத்தப்பட்டது.  

திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று காலை 4:40 மணிக்கு ஷார்ஜாவுக்கு 180 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக,  விமானம் ஓடு பாதையிலேயே அவசரமாக நிறுத்தப்பட்டது.  விமானம் பயணிகள் அனைவரும் விமானத்துக்குள்ளேயே அமர வைக்கப்பட்டனர். 

திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய், ஷாஜா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயணிகள் இந்த விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில இன்று அதிகாலை 4:40 மணிக்கு திருச்சியிலிருந்து சார்ஜாவுக்கு 180 பயணிகளுடன் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே அதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாகவிமானி விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்திவிட்டு இது குறித்து கட்டுப்பாட்டு அறிக்கை தகவல்
அளித்துள்ளார். 

அதனை தொடர்ந்து அந்த விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பமான கோளாறை சரி செய்யும் பணியில் வல்லுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் விமானத்திலே அமர வைக்கப்பட்டிருந்தனர். இதனால் அவர்கள் அவதி அடைந்தனர்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் வருகை: ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று பக்தர்களுக்கு தடை விதிப்பு...!

தொழில் நுட்ப கோளாறை சரி செய்ய கூடுதல் நேரம் ஆகும் என்பதால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் 3 மணி நேரத்திற்குப் பிறகு இறக்கி விடப்பட்டனர். பகல் 12 மணிக்கு மாற்று விமானம் மூலம் அவர்கள் அனைவரும் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  விமானம் புறப்படுவதற்கு முன்பாகவே தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: இங்கிலாந்தில் கால் வைத்ததும் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்... தமிழர்களின் அன்பால் மன உருகிய முதலமைச்சர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share