×
 

திருச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா... திருவானைக்காவல் கோயிலில் சாமி தரிசனம்...!

தமிழகம் வருகை தந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா திருச்சி திருவானைக்கால் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு வருகை, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு ரீதியான வலுப்படுத்தலுக்கான முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது. ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த இரு நாள் சுற்றுப்பயணம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை மையப்படுத்தியது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலிருந்து தனி விமானம் மூலம் ஜனவரி 4 அன்று மாலை திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்த அமித்ஷாவை தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல். முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

வருகையின் முதல் நாளில், அமித் ஷா ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை சென்று, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற மாநில அளவிலான யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். 

பொதுக்கூட்டத்துக்குப் பிறகு திருச்சிக்கு திரும்பிய அமித் ஷா, நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். இரவு நேரத்தில் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் மூடிய அறை ஆலோசனைக் கூட்டம் நடத்தி, கட்சியின் அமைப்பு வலுப்படுத்தல், உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் தயாரிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தார். வருகையின் இரண்டாம் நாளான இன்று திருவானைக்கால் ஜம்முகேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து திருவரங்கம் அரங்கநாதரை தரிசிக்க அமித் ஷா செல்ல உள்ளார்.

இதையும் படிங்க: கலாசாரத்துக்கு அச்சுறுத்தல்!! ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் காங்.,! வெளுத்து வாங்கும் அமித் ஷா!

தொடர்ந்து திருச்சியில் பாஜக மாநில முக்கிய நிர்வாகிகள், மையக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த உள்ளார். இந்தக் கூட்டங்களில் தமிழக அரசியல் நிலவரம், கட்சி வலுப்படுத்தல், அடிமட்ட அணிதிரட்டல், தேர்தல் உத்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மன்னார்புரம் ராணுவ முகாமில் நடைபெறும் 'மோடி பொங்கல்' கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளார். இது கலாச்சார ரீதியாக மக்களுடன் இணைவதற்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மோடி சாதாரண ஆள் கிடையாது!! 'நமோத்சவ்' நிகழ்ச்சியில் அமித் ஷா வெளியிட்ட உண்மை தகவல்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share