×
 

#Breaking காவலர் குடியிருப்பில் படுகொலை... திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய அண்ணாமலை!

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை

திருச்சியில் இளைஞர் ஒருவர் காவலர் குடியிருப்புக்குள் ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி பீமநகர், செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (25). கண்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். காலை சுமார் எட்டு முப்பது மணி அளவில் வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்ற தாமரைச்செல்வனை ஐந்து பேர் கொண்ட கும்பல் அரிவாளியுடன் துரத்தியது.

அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடிய தாமரைச்செல்வனை பீமா நகர் காவலர் குடியிருப்பு பகுதி வாசலில் மடக்கி சரமாரியாக வெட்டி கொன்றனர். தமிழகத்தையே குலுக்கிய சம்பவத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது கடும் கண்டனங்களை பதிவு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: டைம் தான் வேஸ்ட்... அண்ணாமலைக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சுப்ரீம்கோர்ட்...!

இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இதன் உச்சகட்டமாக, இன்று காலை, திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில், பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. 

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது. 

பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலையில் தமிழகம் தரம் தாழ்ந்திருக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் , கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என சகட்டு மேனிக்கு சாடியுள்ளார்.

இதையும் படிங்க: கொம்பு முளைச்சிருக்கா? ஒருமையில் பேசி செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share