×
 

மோடியும் ட்ரம்பும் போன் பேசவே இல்லை! அமெரிக்க அதிபர் மூக்குடைப்பு! இந்தியா திட்டவட்டம்!

ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் தான் அந்த போரை நிறுத்துவது கடினமாக இருக்கிறது. இனி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கமாட்டோம் என்று மோடி தன்னிடம் உத்தரவாதம் தந்ததாக டிரம்ப் அதிர்ச்சி கிளப்பினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகின் அனைத்து போர்களையும் நிறுத்தியதாக பெருமையுடன் கூறியபோது, ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவது கடினமானது என்று சொன்னார். காரணம், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் அதிக அளவில் வாங்குவதால், அந்த பணத்தால் ரஷ்யா போரைத் தொடர்கிறது என்கிறார் டிரம்ப்.

சமீபத்தில் மோடியுடன் பேசியதாகவும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உத்தரவாதம் அளித்ததாகவும் டிரம்ப் அதிர்ச்சி கிளப்பினார். "ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதால் உக்ரைன் போருக்கு நிதி கிடைக்கிறது. இதை நிறுத்துங்கள் என்று கூறினேன். மோடி உறுதியாக சொன்னார். அவர் நல்ல மனிதர்" என்று டிரம்ப் பேட்டியில் தெரிவித்தார்.

இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் கடும் அதிர்ச்சி! ஏனெனில், இதுவரை இந்தியா எந்த உத்தரவாதமும் பொதுவெளியில் கொடுக்கவில்லை. ரஷ்ய எண்ணெய் வாங்குவது நாட்டின் பொருளாதார நலனுக்காகவே  (எரிபொருள் விலை நிலையாக, சப்ளை உறுதியா வைத்திருக்க) என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறியிருந்தது. மூன்றாம் நாடுகள் தலையிட முடியாது என்பது இந்திய நிலைப்பாடு.

இதையும் படிங்க: சீக்கிரம் போரை முடிங்க!! ரஷ்யாவுக்கு வார்னிங்! உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுக்கும் ராட்சஷன்!

டிரம்பின் கூற்றை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆகச் செய்தன. ஆனால், வெளியுறவு அமைச்சகம் உடனடியாக மறுத்தது. "எண்ணெய் கொள்முதல் நாட்டின் நலனுக்காக. ரஷ்யாவிடமிருந்து வாங்குவது எரிபொருள் விலை நிலைத்தன்மை, சப்ளை உறுதிக்காகவே" என்று அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் உண்மையை வெளிப்படுத்தினார்: "ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் மோடி டிரம்புடன் எதுவும் பேசவில்லை. குறிப்பாக புதன்கிழமை எந்த டெலிபோன் உரையாடலும் இல்லை. வேறு வழியிலும் பேச்சு இல்லை." என்றார்.

இதனால் டிரம்பின் கூற்று பொய்யானது என்பது தெளிவானது. இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கையை டிரம்ப் தவறாக விளக்கியது இந்த சம்பவம். நாட்டு நலனுக்காக ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடரும் என இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரஷ்யாவை விடக் கூடாது! பயங்கரமான ஆயுதங்களை கொடுங்க! அமெரிக்காவிடம் கேட்கும் உக்ரைன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share