×
 

ஜெயலலிதாவின் RIGHT HAND டிடிவி தினகரன்... புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை...!

ஜெயலலிதாவின் வலதுகரமாக இருந்தவர் டிடிவி தினகரன் என அண்ணாமலை புகழாரம் சுட்டியுள்ளார்.

தமிழக அரசியலின் முக்கியமான முகங்களில் ஒருவரான டி.டி.வி. தினகரன் இன்று தனது 62வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். திருத்துறைப்பூண்டி திருவேங்கடம் விவேகானந்த தினகரன் எனும் முழுப்பெயர் கொண்ட இவர், 1963ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தம் - வனிதாமணி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தமிழக அரசியலில் "டிடிவி" என்று பிரபலமாக அறியப்படும் இவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர்.

இவரது அரசியல் வாழ்வு ஏற்ற இறக்கங்களும், கூட்டணி மாற்றங்களும் நிறைந்தது.தினகரனின் அரசியல் பயணம் 1990களின் இறுதியில் தொடங்கியது. அத்தியாவசிய சசிகலாவின் செல்வாக்கால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) இணைந்தார். 1999ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2004 முதல் 2010 வரை ராஜ்யசபா உறுப்பினராகவும் பணியாற்றினார். அதிமுகவில் கட்சியின் பொருளாளராகவும் உயர்ந்தார். ஆனால் 2011இல் ஜெயலலிதாவுடனான மோதலால் சசிகலா குடும்பம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017இல் சசிகலா கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக ஆனபோது, தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். 

தினகரன் தமிழக அரசியலில் ஜெயலலிதா விசுவாசிகளின் ஒரு பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும், உறுதியான போராட்டக்காரராகவும் அறியப்படுகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் டிடிவி தினகரனுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், அன்பு அண்ணன் டிடிவி தினகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். சுமார் நாற்பதாண்டுகளாக, தமிழக அரசியலில் முக்கியமான இடம் பெற்றவர். மக்கள் பணிகளில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர்.

இதையும் படிங்க: என்ன சமரசமா? மீண்டும் NDA கூட்டணியா? டிடிவி தினகரன் நச் பதில்...!

அரசியல் வியூகங்களில் சிறந்தவராகத் திகழ்பவர். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களின் அவரது வலதுகரமாகத் திகழ்ந்தவர் என கூறியுள்ளார். டிடிவி தினகரன் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து தனது அரசியல் பணிகளிலும், சமூகப் பணிகளிலும் சிறந்து விளங்க வேண்டுமென்று வேண்டிக் கொள்வதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: செங்கோட்டையன் போனா நானும் போகனுமா?... அண்ணாமலையை சந்தித்த பின் டோட்டலாக மாறிய டிடிவி தினகரன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share