×
 

கொடுமையா இருக்கு..! தனிக்கவனம் செலுத்துங்க விஜய்..! Ttv தினகரன் வலியுறுத்தல்..!

கோவையில் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கொடூரமான முறையில் படுகொலை மனிதநேயமற்ற மிருகங்கள் மீது சமரசமற்ற முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்ததாகத் தெரிகிறது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இந்த சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார். கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்து குளக்கரையில் வீசப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: காலியாகும் அமமுக கூடாரம்... முக்கிய நிர்வாகிகள் எடுத்த அதிரடி முடிவு... டிடிவி தலையில் விழுந்தது பேரிடி...!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமல்லாமல் சமூகத்தின் அடிப்படை மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் அவலநிலையை ஏற்படுத்தி உள்ளது என்றார். பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share