×
 

மேட்டூர் திறப்பில் சிக்கல்.. குறுவை விவசாயம் ஆபத்தில்..!! தவெக அரசை எச்சரித்த டிடிவி தினகரன்..!!

தமிழக முதல்வர் விஜய் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படும் நிலையில் ttv தினகரன் முக்கிய விவகாரங்களை வலியுறுத்தி உள்ளார்.

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க முடியாத நிலை இருப்பதால் மாற்று ஏற்பாடுகளை தவெக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களைச் சார்ந்த ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் குறைவாக இருப்பதால் நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கான தண்ணீர் ஜூன் 12 ஆம் தேதி திறக்க வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகி இருப்பதாக குறிப்பிட்டார். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்பில்லை என்பதால் குறுவை சாகுபடியே கேள்விக்குறியாகியுள்ளது என்றார். 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததாலும், கர்நாடகாவில் இருக்கும் முக்கிய அணைகளில் நீர் இருப்பு மிகக் குறைவாக இருப்பதாலும் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்பதால் விவசாயம் மட்டுமல்லாது அதனையே நம்பியிருக்கும் பல லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். 

தவெக என்பது புதிய அதிமுக என்று பேசும் தவெக அமைச்சர்கள், இதுபோன்ற இயற்கை இடர்பாடுகள் நிறைந்த சூழல் நிலவும் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்போடு, நிலத்தடி நீரின் மூலமாகக் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முன்வரும் விவசாயப் பெருமக்களுக்கு மும்முனை மின்சாரத்தையும் தடையின்றி வழங்கிட முன்வர வேண்டும் என விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்து இருப்பதாக ttv தினகரன் தெரிவித்துள்ளார்.  

இதையும் படிங்க: நாள் நட்சத்திரம் பாக்கணுமா..? வாயைத் திறங்க விஜய்..! விளாசிய TTV தினகரன்..!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், விரைவில் டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களைச் சந்தித்து தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய நேரத்தில் திறந்து விடுமாறு மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் DK.சிவக்குமாருக்கு க்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதத்தைக் கைவிடும் உத்தரவாதத்தையும் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: பாதுகாப்பு படையையே தொடங்கி வைக்க முடியல..! எப்படி பாதுகாப்பீங்க..? விளாசிய TTV..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share