×
 

பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு இல்ல... குரூர புத்தி திமுக நிர்வாகி... Ttv தினகரன் கண்டனம்..!!

இரண்டு மாத குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணந்தூரை சேர்ந்த 28 வயது சூர்யா ஓசூரில் கட்டிட வேலை செய்து வந்தார். அவரது மனைவி பிரின்சி இரண்டரை வயது பெண் குழந்தையுடன் கணவரை பிரிந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் தாய் வீட்டுக்கு சென்றார். சூர்யா அவ்வப்போது குழந்தையை பார்க்க செல்வார். ஆனால் கடந்த டிசம்பர் 11-ம் தேதி பிரின்சியிடமிருந்து அதிர்ச்சி அழைப்பு வந்தது. "குழந்தைக்கு வலிப்பு வந்துவிட்டது, மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறேன்" என்று கூறிவிட்டு போன் வைத்துவிட்டார்.

ஆனால் மருத்துவமனையில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர். சூர்யா அதிர்ந்து போனார். குழந்தை இயற்கை மரணம் அடையவில்லை என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக அஞ்செட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சந்தேசு மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர். பிரேத பரிசோதனை அறிக்கை மேலும் அதிர்ச்சி அளித்தது. குழந்தையின் உடலில் உள் காயங்கள், பாலியல் தொந்தரவு அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தன. இதையடுத்து போலீசார் ஆழமான விசாரணை நடத்தினர். திடுக்கிடும் உண்மை வெளியானது.

பிரின்சி கணவரை பிரிந்த பிறகு அஞ்செட்டியைச் சேர்ந்த பெரியநாயகம் என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். பெரியநாயகம் திமுக இளைஞர் அணி கிளை செயலாளராக உள்ளவர். அவர் அடிக்கடி பிரின்சியை சந்திக்க அஞ்செட்டி வந்து சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தது தெரிய வந்தது.

இதையும் படிங்க: சசிகலாவுக்கே சவாலா?... சின்னம்மாவை ‘சீப்போடு’ ஒப்பிட்ட டிடிவி தினகரன்... அதிமுகவுடன் இணைந்த ஜோரில் நக்கல்...!

இதையடுத்து அஞ்செட்டி போலீசார் பெரியநாயகத்தை கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார். பச்சிளம் குழந்தைக்குக் கூட பாதுகாப்பில்லாத திமுக அரசை வரும் தேர்தலில் வீட்டிற்கு அனுப்புவது தான் ஒரே தீர்வு என்று கூறினார்.

பச்சிளம் குழந்தைகள், கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் வசிக்கும் வயதான முதியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழகத்தை மாற்றிவிட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் எனப் பெருமை பேசுவதும், பல கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்வதும் வெட்கக் கேடானது என்று தெரிவித்தார்.

கஞ்சா விற்பனையில் தொடங்கி கள்ளச்சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த திமுக நிர்வாகிகளைக் கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவே, தற்போது அரங்கேறியிருக்கும் இந்த கொடூர சம்பவத்திற்கு அடிப்படை காரணம் எனப் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றார். பச்சிளம் குழந்தை என்று பாராமல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குரூர மனம் படைத்த திமுக நிர்வாகிக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: WAIT & SEE..!! OPS, சசிகலா நிச்சயமா NDA கூட்டணிக்கு வருவாங்க..! TTV தினகரன் திட்டவட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share