வெற்றிப் பயணத் திட்டம்..! "அலைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்"..! TTV தினகரன் விளாசல்.!!
வெற்றிப் பயணத் திட்டத்தை குறிப்பிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தின்கீழ் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்கும் வாய்ப்பு பெண்கள் மற்றும் திருநர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளையும் அவர்களுடன் வரும் துணையாளர் ஒருவரையும் இத்திட்டத்தில் சேர்க்கக் கோரி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதனைச் சுட்டிக்காட்டிய டிடிவி தினகரன், சட்டமன்றத்தில் சமூகநலத்துறை அமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்திருந்த போதிலும், இதுவரை உரிய அரசாணை வெளியிடப்படாததால் பேருந்து நடத்துநர்கள் மாற்றுத்திறனாளிகளைப் பயணிக்க அனுமதி மறுப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன என்று குறிப்பிட்டார்.
அரசின் அறிவிப்புக்கும் நடைமுறைக்கும் இடையேயுள்ள இந்த முரண்பாடு, தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அவர் விமர்சித்தார். வெறும் ரீல்ஸ் கன்டென்ட்டுக்காக அவசரகதியில் அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, அவற்றைச் செயல்படுத்துவதற்கான அரசாணைகளைப் பிறப்பிக்காமல் காலம் தாழ்த்துவது தவெக அரசின் வாடிக்கையான நடைமுறையாகிவிட்டதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: நாதகவினர் கைது..! அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்..!! TTV தினகரன் விளாசல்.!
இதனால் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதோடு, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் சீர்கெட்டு வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.சட்டமன்றத்தில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், வெற்றிப் பயணம் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடன் துணையாளர் ஒருவரும் கட்டணமின்றிப் பயணிக்க அனுமதிக்கும் உரிய அரசாணையை உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என தவெக அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: போதைப் பொருள் விஷயத்தில் தவெக நிர்வாகி..! மாரத்தான் ஓடி என்ன பயன்.? CM விஜய்க்கு TTV தினகரன் கண்டனம்..!!