கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!
தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை வணங்க வேண்டும் எனவும் டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழகத்தில் ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் அரங்கேறியுள்ள படுகொலைச் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் பார் உரிமையாளரால் இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டது, மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் காவல் நிலையம் அருகிலேயே சரவணன் என்ற நபர் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்டது,
மதுரை மேலூர் அரசுப் பள்ளி அருகே செல்லத்துரை என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது, சென்னை புறநகர் குன்றத்தூர் அருகே தண்டலத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டது, தாம்பரத்தில் வெல்டர் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டது, கரூரில் இறந்த நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது உள்ளிட்ட எட்டு படுகொலைச் சம்பவங்கள் ஒரே நாளில் நடந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு வெற்றிக் கழக ஆட்சிக்கு வந்த பிறகு அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்வதிலும், அவர்களுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தருவதிலும் ஏற்படும் காலதாமதமும் அலட்சியமுமே இதுபோன்ற அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களுக்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளது என்றும், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தினகரன் தெரிவித்தார். சமூக விரோதிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்காணித்து, குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவேண்டிய காவல்துறையினர் தங்களது அடிப்படைப் பொறுப்பை உணராமல் அலட்சியமாகச் செயல்படுகின்றனரா, அல்லது அவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: சென்னை ஏர்போர்ட் தனியார்மயமா..? சூடு பிடிக்கும் விவகாரம்... டிடிவி தினகரன் சரமாரி கேள்வி.!!
தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைத்து, பதற்றமான சூழலை அதிகரிக்கும் இதுபோன்ற படுகொலைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டம் ஒழுங்கைச் சீர்செய்ய எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது குறித்தும் தினகரன் கேள்வி எழுப்பினார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வளவு முக்கியம் என்பது அவருக்குப் புரிகிறதா, அல்லது புரிந்தும் தனது நிர்வாகத் திறமையின்மையால் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளாரா என்ற கேள்வியும் எழுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தினம்தோறும் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அரங்கேறிய படுகொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தருவதோடு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் காவல்துறையையும் தமிழ்நாடு வெற்றிக் கழக அரசையும் வலியுறுத்துவதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெங்கு பாதிப்பால் 9 பேர் பலி..! அவ்வளவும் அலட்சியம்..! TTV தினகரன் காட்டம்..!!