×
 

அண்ணன்..! மீண்டும் NDA கூட்டணியில் சேர்ந்த டிடிவி தினகரனை வரவேற்ற அண்ணாமலை..!

NDA கூட்டணியில் TTV தினகரன் மீண்டும் இணைந்துள்ளார். அவருக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலைக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையேயான அரசியல் உறவு கடந்த சில ஆண்டுகளாகவே கவனத்தை ஈர்த்து வருகிறது. இது வெறும் தனிப்பட்ட நட்பு அல்ல; தமிழக அரசியலில் கூட்டணி, பிரிவு, மீண்டும் இணைதல் போன்ற முக்கிய மாற்றங்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அண்ணாமலை தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த காலகட்டத்தில் அமமுகவுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தினார். அப்போது அமமுக NDA கூட்டணியில் இருந்தது. தினகரன் பலமுறை அண்ணாமலையின் கூட்டணி நிர்வாகத்தை பாராட்டினார். "அண்ணாமலை கூட்டணியை சிறப்பாக கையாண்டார்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இது இருவருக்கும் இடையே நல்லுறவு இருப்பதை வெளிப்படுத்தியது. ஆனால் 2025 செப்டம்பரில் அமமுக NDA-விலிருந்து வெளியேறியது. இதற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மறுப்பது மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் போக்கு என்று தினகரன் குற்றம்சாட்டினார்.

அப்போது அண்ணாமலை தனிப்பட்ட முறையில் தினகரனை சந்தித்து NDA-வில் திரும்ப இணையுமாறு வலியுறுத்தினார். சென்னை அடையாரில் தினகரன் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது. அண்ணாமலை தினகரனை திரும்ப அழைத்தாலும், EPS-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க மறுத்ததால் தினகரன் உடனடியாக ஒப்புக்கொள்ளவில்லை.இருப்பினும், இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட நட்பு தொடர்ந்தது. 

இதையும் படிங்க: திமுகவின் மூன்றாவது மெகா ஊழல்!! EDயிடம் சிக்கிய குடுமி! ரூ.367 கோடி அபேஸ்!! அலசிய அண்ணாமலை!!

இதனிடையே, NDA கூட்டணியில் TTV தினகரன் மீண்டும் இணைந்துள்ளார். அவருக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறினார். அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரனுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அண்ணன் TTV தினகரன் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: சத்துணவு ஊழியர்கள் ஸ்ட்ரைக்... மாணவர்களை பாதிக்கும்னு கூட உரைக்கலையா? அண்ணாமலை கொந்தளிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share