×
 

நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள்... மருத்துவ கனவு சிதையும்..! குரல் கொடுத்த TTV தினகரன்..!

நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் விவகாரத்தில் TTV தினகரன் வலியுறுத்தல் ஒன்றை முன்வைத்துள்ளார்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகளால் மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டு இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைக்கும் இந்தப் போக்கைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என கேட்டு உள்ளார். 

 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், மாநில ஒதுக்கீட்டிலிருந்து சுமார் 650 மருத்துவ இடங்கள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார். இது நடைமுறைக்கு வந்தால், மாநில ஒதுக்கீட்டுக்கான மருத்துவ இடங்கள் மேலும் குறைவதுடன், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்படும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிலும் சுமார் 50 இடங்கள் குறையும் அபாயம் உருவாகியுள்ளது என்று எச்சரித்துள்ளார். 

ஏற்கனவே அதிக கட்டணம் வசூலிக்கும் நீட் பயிற்சி மையங்கள், தேர்வு முறைகேடுகள், தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்படும் குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் மாணவர்களுக்கு, மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் குறைவதும், அதனால் மருத்துவச் சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் மேலும் உயர்வதும், மருத்துவக் கல்வியை ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாற்றும் என கல்வியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மோடியை சந்திச்சு பேசுங்க CM..! மேகதாது பணியை தொடங்கிய கர்நாடகா..? டிடிவி தினகரன் எச்சரிக்கை..!!

இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்திய முடிவை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். அந்த நடவடிக்கைகள் காலதாமதமின்றி உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாள அட்டை..? அமைச்சர் பேச்சால் சர்ச்சை..! TTV தினகரன் ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share