×
 

முன்னறிவிப்பின்றி சொத்துவரி உயர்வு..! மக்கள் எதிர்ப்பால் பின்வாங்கிய மாநகராட்சி... விளாசிய TTV தினகரன்..!

சொத்துவரி உயர்வு விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரன் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து உள்ளார்.

சென்னை மாநகராட்சியில் திடீரென உயர்த்தப்பட்ட சொத்துவரி பொதுமக்களிடம் எழுந்த கடும் எதிர்ப்பால் நிறுத்திவைப்பு வைக்கப்பட்டதாக அம்மா முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியைச் சமாளிக்க மக்கள் மீது சுமையை ஏற்ற முயல்வதா என்றும் கேட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் எந்தவித முன்னறிவிப்புமின்றி பன்மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரிக்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆட்சேபனை தெரிவிக்க முகாம்கள் அமைக்கப்படும் என அறிவித்த சென்னை மாநகராட்சி, தற்போது சொத்துவரி உயர்வை நிறுத்திவைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்றார்.

மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு, வரிவிதிப்பு நிலைக்குழுவின் வழிமுறைகளின்படி உயர்த்தப்பட வேண்டிய சொத்துவரி, எந்தவித முன்னறிவிப்புமின்றி உயர்த்தப்பட்டது எப்படி? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே தெரியாமல் சொத்துவரியை உயர்த்துவதற்கான அதிகாரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எங்கிருந்து வந்தது? என சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.

இதையும் படிங்க: அமமுக என்கிட்டதான் இருக்கு! பொதுக்குழு கூட்டி நிரூபிப்பேன்! டிடிவி தினகரனுக்கு எதிராக எம்.எல்.ஏ காமராஜ் சவால்!

ஏற்கனவே, மறைமுக மின்கட்டண உயர்வால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது சென்னை மாநகரில் சாதாரண நடுத்தரக் குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்கு வணிக நிறுவனங்களுக்கு இணையாக வரி மதிப்பீடு செய்து, அவர்களுக்கு கூடுதல் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த முயல்வது எந்த வகையில் நியாயம்? என கேட்டுள்ளார்.

 சொத்துவரி விதிப்பில் சென்னை மாநகராட்சியில் ஏற்பட்டிருக்கும் நிர்வாகக் குளறுபடிகளை உடனடியாகச் சரிசெய்திடவும், கூடுதலாக சொத்துவரி வசூலிக்கப்பட்ட அனைவருக்கும் அந்தத் தொகையை உடனடியாகத் திருப்பி வழங்கிடவும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும், தவெக அரசையும் வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சீருடைப் பணியாளர் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றம்..! டிடிவி தினகரன் அதிருப்தி.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share