×
 

முகமூடியார் பழனிச்சாமி... வீரவசனம் பேசிட்டு அமித்ஷாவை பார்த்து இருக்காரு! நக்கலடித்த டிடிவி தினகரன்

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த நிகழ்வை டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று இருந்தார். நேற்று மதியம் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிச்சாமி இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது வெளியில் வரும்போது முகத்தை மூடிக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி வந்ததாக தகவல்கள் பரவியது. இதற்கு அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் எதற்காக அமித்ஷாவை சந்தித்தேன் என எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

அமித்ஷாவை சந்தித்தபோது முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கைகளிடம் வழங்கியதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி எதற்காக சந்தித்தார் என்ற விளக்கத்தை விமர்சித்தார்.

தேர்தல் வெற்றியை விட தன்மானமே முக்கியம் என எடப்பாடி பழனிச்சாமி பேசியதை குறிப்பிட்டார். வீர வசனம் எல்லாம் பேசிவிட்டு தற்போது அமித்ஷாவை சந்தித்திருப்பதாக விமர்சித்தார். தமிழ்நாட்டு மக்களை எடப்பாடி பழனிச்சாமியால் இனியும் ஏமாற்ற முடியாது என்றும் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கத்தில் இருப்பது அவரது அன்பு மகன் என தகவல்கள் பரவியதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியை காப்பாற்றியது யார்? சசிகலா மட்டும் இல்லைனா... இபிஎஸ்-ஐ லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி..!

இரட்டை இலையை வைத்துக்கொண்டு அதிமுக தொண்டர்களை எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றிய வருவதாக குற்றம் சாட்டினார். இபிஎஸ் அடிக்கும் கூத்துக்களை ராஜதந்திரம் என்று கூறிக் கொண்டிருந்ததாகவும், இப்போது சாயம் வெளுத்து விட்டதாகவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியை இன்று முதல் முகமூடியார் பழனிச்சாமி என்று அழைப்பதாகவும் விமர்சித்துள்ளார். தென் மாவட்ட மக்களை சரி செய்ய எடப்பாடி பழனிச்சாமி முயற்சி மேற்கொண்டு வருவதாகவும்., அவர் நினைப்பது போல தென்மாவட்ட மக்கள் முட்டாள்கள் இல்லை எனவும் கூறினார்.

இதையும் படிங்க: பொதுச்செயலாளர் பதவிக்காக எடப்பாடி பார்த்த உள்ளடி வேலை... முகத்திரையைக் கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share