×
 

கூட்டணி ஆட்சி தான் கரெக்ட்.. திமுக வேலைக்கு ஆகாது! விளாசிய TTV தினகரன்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் சரியான ஆட்சியாக இருக்க முடியும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திமுக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் நிர்வாகத் தோல்விகள், ஊழல், மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டி வருகிறது. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது எனவும் மெத்தன போக்கோடு செயல்படுவதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கூட்டணி தொடர்பாகவும் கூட்டணி ஆட்சி தொடர்பாகவும் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். அப்போது, ஜெயலலிதாவும், எம்ஜிஆரும் இல்லாத சூழ்நிலையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் சரியான ஆட்சியாக இருக்க முடியும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்.. நிரந்தர தீர்வு வேண்டும்.. தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதியாக இந்த தேர்தலில் அமையும் என்று உறுதிப்படக் கூடிய டிடிவி தினகரன், தங்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்றும் திமுக ஆட்சியில் தமிழ்நாடு தத்தளித்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். மூன்று வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை பாதுகாப்பாக இருக்கக் கூடிய சூழ்நிலை தமிழ்நாட்டில் தற்போது இல்லை என்றும் காவல்துறை செயலற்று கிடப்பதாகவும், குற்றவாளிகளை கைது செய்வதை பெரும் சவாலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.  விவசாய நிலங்களை பாதுகாப்போம் என்று வாக்குறுதி அளித்த திமுக, சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது என குற்றம் சாட்டினார். பல இடங்களில் விளைநிலங்களை சிப்பாட்டுக்காக கையகப்படுத்துவது எதிர்த்து பொதுமக்களும், விவசாயிகளும் போராடிவரும் சூழல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அஜித் குமார் குடும்பத்தினரை திருமாவளவன் சென்று சந்தித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், அஜித் குமார் குறித்து நிகிதா என்ற பெண் கொடுத்த புகாரின் பேரில் யாருடைய அழுத்தத்தின் காரணமாக அஜித்குமார் தாக்கப்பட்டார் என்பது குறித்து கண்டுபிடிக்க திருமாவளவன் பேசியதாக தெரியவில்லை எனக் கூறினார். அவர் நேரில் சென்று ஆறுதல் கூறினாரே தவிர, அழுத்தம் கொடுத்த நபர் யார் என்பது குறித்து கேள்வி எழுப்பவில்லை என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வரிக்குறைப்பு மூலம் ரூ.200 கோடி அளவிற்கு முறைகேடு.. ஆளும் கட்சியை விளாசிய டிடிவி தினகரன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share